ETV Bharat / state

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் மோசடி வழக்கு - ஜாமீன் மறுப்பு - Helicopter Brothers case

ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கு பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றி இருப்பதாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்
பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்
author img

By

Published : Sep 16, 2021, 8:43 PM IST

மதுரை: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், இருவர் மீதும் வழக்குப்பதிந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள கணேசன் மனைவி அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலகப் பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று (செப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "நிதி நிறுவன வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அகிலாண்டம் முதல் குற்றவாளியாக உள்ள கணேசன் என்பவரின் மனைவி.

இவர் துபாய், மலேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். இவர் பெயரில் மலேசியாவில், ரூ. 551 கோடி முதலீட்டில் நிறுவனங்கள் உள்ளன " எனத் தெரிவித்தார்.

பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

இதைக் பதிவு செய்துகொண்ட நீதிபதி, " இந்த வழக்கு தற்போது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் இருந்து பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது வழக்கின் விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது.

பிணை கோரும் அகிலாண்டம், முதல் குற்றவாளியின் மனைவியாக இருப்பது மட்டுமல்லாமல், அவரது பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 41 புகார்கள் பெறப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அனைத்து வழக்குகளும் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிணை வழங்கினால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும். அதனால் அகிலாண்டம் கோரிய மனு நிராகரிக்கப்படுவதாக கூறி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோல், அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய வெங்கடேசனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வரி கட்டினார் விஜய் - அரசு விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.