ETV Bharat / state

Kalaingar library: ஷிவ் நாடாரை அழைத்தது ஏன்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு வசீகரப் பேச்சாளர் என்றும், அவரால்தான், தமிழ்நாட்டில் தங்களது நிறுவனம் கால்பதித்ததாக ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் தெரிவித்து உள்ளார்.

கருணாநிதி ஒரு வசீகரப் பேச்சாளர் - நூலக திறப்பு விழாவில் HCL நிறுவனர் ஷிவ் நாடார் நெகிழ்ச்சி!

author img

By

Published : Jul 16, 2023, 12:05 PM IST

கருணாநிதி ஒரு வசீகரப் பேச்சாளர் - நூலக திறப்பு விழாவில் HCL நிறுவனர் ஷிவ் நாடார் நெகிழ்ச்சி!

மதுரை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் பிரமாண்டமான நூலகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ரூ.215 கோடி செலவில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டும் பணி தொடங்கி 12 மாதங்களில் விரைவாக முடிவடைந்து, மதுரையில் புதுநத்தம் சாலையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.

தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தில் மின்னணு நூலகம் செயல்பட உள்ளது. பார்வையற்றவர்கள் படித்து பயன் பெறும் வகையில் அவர்களுக்கான பிரத்யேக வசதிகளுடன் இந்த நூலகம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை நேற்று (ஜூலை 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார், கருணாநிதி கேட்ட ஒரு கேள்வியால்தான் தமிழ்நாட்டில் HCL நிறுவனங்களை திறந்ததாக கூறினார். இது தொடர்பாக ஷிவ் நாடார் கூறியதாவது, “கருணாநிதியை எனக்கு நன்றாக தெரியும். அவரை ஐந்து முறை சந்தித்து பேசியுள்ளேன். வசீகரமான பேச்சாளர். கருணாநிதி சொல்லித்தான் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினோம்.

‘நீங்க டெல்லிக்கு போய்ட்டீங்க.. தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லையா?’ என்று கேட்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகின்றோம். அதன்பிறகுதான் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஹெச்சிஎல் அலுவலகத்தை துவங்கி உள்ளோம்.

எங்களது நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவே செயல்பட்டு வருகிறது. எங்களது நிறுவனத்தில் 7 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எங்களது நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டில் சென்னைக்குப் பிறகு, மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப அலுவலகம் இங்குதான் அமைந்து உள்ளது. கோயம்புத்தூரில் கூட, இந்த அளவிற்கு பெரிய கட்டமைப்பு இல்லை.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முழுவதும் சுற்றிப் பார்த்தேன். இங்கு அதிகமான அளவில் புத்தகங்கள் உள்ளன. கருணாநிதி எழுதிய புத்தகங்களும் இங்கு அதிகம் உள்ளன. இந்நிகழ்ச்சியில், நான் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், மற்ற அமைச்சர்கள், பொதுமக்கள், தாய்மார்களுக்கும், என் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

ஷிவ் நாடாருக்கு அழைப்பு ஏன்? - முதலமைச்சர் விளக்கம்: ஒரு கிராமத்தில் பிறந்து, மாநகராட்சிப் பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இன்றைக்கு ஷிவ் நாடார், சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய மகள் ரோஷிணி, அந்த நிறுவனத்தினுடைய இயக்குநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாகவும், இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி புத்தகங்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கையடக்க கணினி - சபாநாயகர் அப்பாவு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.