ETV Bharat / state

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி தொடர்பான வழக்கு - பதிலளிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - Madras high court madurai bench

மதுரை: மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் தொடர்பாக ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்விற்கு தடைகோரிய வழக்கில் அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court
author img

By

Published : Jul 24, 2019, 9:39 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2009ஆம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பையும், 2010ஆம் ஆண்டு ஆட்டோ ஒர்க்க்ஷாப் மெக்கானிக் படிப்பையும் முடித்துவிட்டு, ஈஸ்வரன் ஆட்டோ டீசல் ஒர்க்ஸில் 2010 முதல் 2011ஆம் ஆண்டு வரை வேலை செய்த அனுபவம் உள்ளது.

கடந்த பிப்ரவரி 2018ல் மோட்டார் வாகன ஆய்வாளர் வேலைக்கு காலியிடம் உள்ளதாக விளம்பரத்தை பார்த்து எனக்கு தகுதி இருப்பதால் அந்த வேலைக்கான தேர்வை கடந்தாண்டு ஜூன் மாதம் எழுதினேன். அந்தத் தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 113 காலியிடம் உள்ளதாக விளம்பரம் வெளியான நிலையில், 33 பேர் பெயர் மட்டுமே தேர்வுப்பட்டியலில் உள்ளது.

இதில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அதிகபட்சம் 171 மதிப்பெண்கள் தகுதி இருந்தால் போதும் என்று விளம்பரத்தில் இருந்தது, ஆனால் எனக்கு 242 மதிப்பெண்கள் இருந்தும், ஆகஸ்டு 5ஆம் தேதி நடக்க உள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வரவில்லை. இந்தத் தேர்வை மொத்தம் ஆயிரத்து 328 பேர் எழுதினர். ஆனால் 33 பேரை மட்டும் தேர்வு செய்துள்ளனர். நான் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தும் ஏன் என்னை தேர்வு செய்யவில்லை என தெரியவில்லை. ஆகையால் இந்த நேர்முகத் தேர்வை நடத்த இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Intro:மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் தொடர்பாக ஆகஸ்ட் 5ல் நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்விற்கு தடை கோரும் வழக்கில் அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடம் தொடர்பாக ஆகஸ்ட் 5ல் நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்விற்கு தடை கோரும் வழக்கில் அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் அண்ணா பல்கலைகழகத்தில் 2009 ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிப்பையும், 2010 ம் ஆண்டு ஆட்டோ ஒர்க்க்ஷாப் மெக்கானிக் படிப்பை முடித்துவிட்டு, ஈஸ்வரன் ஆட்டோ டிசல் ஒர்க்ஸில் 2010 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வேலை செய்த அனுபவம் உள்ளது.

கடந்த பிப்ரவரி 2018 ல் மோட்டார் வாகன ஆய்வாளர் வேலைக்கு காலியிடம் உள்ளதாக விளம்பரத்தை பார்த்து எனக்கு தகுதி இருப்பதால் நான் வேலைக்காக மனு செய்து, 10.06.2018 அன்று தேர்வு எழுதினேன். ஒரு வருடம் கழித்து 15.07.2019 அன்று தேர்வானவர்கள் பட்டியல் வெளியிட்டது .113 காலியிடம் உள்ளன, என்று விளம்பரம் வெளியான நிலையில், 33 பேர் பெயர் மட்டும் தேர்வுப்பட்டியலில் உள்ளது.

இதில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அதிகபட்சம் 171 மதிப்பெண்கள் தகுதி இருந்தால் போதும் என்று விளம்பரத்தில் இருந்தது, ஆனால் எனக்கு 242 மதிப்பெண்கள் இருந்தும் 05.08. 2019 அன்று நடக்க இருக்கும் நேர்முக தேர்வுக்கு அழைப்பு கொடுக்கவில்லை.
மொத்தம் 1328 பேர் தேர்வு எழுதி 113 பேருக்கு பணியிடம் இருந்தும் 33 பேர் மட்டும் தேர்வு செய்துள்ளனர்.

நான் படித்து 10 ஆண்டுகள் கழித்தும் நல்ல மதிப்பெண் எடுத்தும் ஏன் என்னை தேர்வு செய்யவில்லை என தெரியவில்லை.
ஆகையால் இந்த நேர்முக தேர்வை நடத்த இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் இது குறித்து அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 29 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.