ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சரவணன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராமேஸ்வரம் கோயில் பணிகளுக்காக 2019 ஜூன் 19ஆம் தேதி அருள்மிகு ராமநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை வைத்து கோயில் பணிகளை மேற்கொள்ள ரூ.5 லட்சம் டெபாசிட் செய்வதோடு கட்டணமாக ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும். ஊழியர்களுக்கு ரூ.12, 500 ஊதியமாக வழங்கப்பட வேண்டும்.
டெண்டர் விதிமுறையின்படி ஊழியர்களுக்கு ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். ஊழியர்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் அமைய வேண்டும். பணியாற்றுபவர்கள் மீது எவ்வித வழக்கும் இல்லை எனவும் உடற்தகுதி சான்றையும் கோயில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் இதுபோன்ற விதிகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே அருள்மிகு ராமநாதசுவாமி கோயில் பணிகளை மேற்கொள்ளும் பத்மாவதி மருத்துவம் - வசதிகள் மேலாண்மை சேவை மையத்தினர் முறையாக ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் ராஜமாணிக்கம் அமர்வு,
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலர், அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் பணிகளுக்கு வழங்கப்பட்ட டெண்டர் ஒப்பந்த விதிமுறைகள், விவரங்கள் குறித்து சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கோயில் ஒப்பந்த பணிகளுக்கான விதிமுறைகளை சீலிட்ட கவரில் தாக்கல்செய்ய உத்தரவு
மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் ஒப்பந்த பணிகளுக்கான விதிமுறைகளை சீலிட்ட கவரில் தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.