ETV Bharat / state

சந்திரயான்-2 மிஷன் தோல்வி அடைந்ததா? உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - HC Madurai bench directed to respond ISRO

சந்திரயான்-2 மிஷன் தோல்வி அடைந்ததா? என்பது குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 3, 2022, 9:48 AM IST

Updated : Dec 3, 2022, 10:11 AM IST

மதுரை: நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2, கடந்த 2019 ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ கூறியது.

ஆனால், மனுதாரர் தனது ஆய்வில், சந்திரயான்-2 மிஷன் பணி தோல்வியடையவில்லை. ஆனால், அமெரிக்காவின் NASA / CIA-வால் திட்டமிட்டு சந்திரயான்-2 திசை திருப்பபட்டது. போலி மற்றும் தவறான புகைப்படங்களை வெளியிட்டு சந்திராயான் முடிவை தவறாக வெளியிட்டது.

இதை கடந்த 2015 ஆம் ஆண்டு நான் கண்டுபிடித்தேன். பிறகு திருவனந்தபுரம் VSSC தலைவர் அலுவலகத்தில் ISRO அதிகாரிகளிடம் 2 மணி நேரம் விளக்கமளித்து தனது ஆய்வு, கண்டுபிடிப்பு பற்றி விளக்கினேன். அவரது கண்டுபிடிப்பை சரிபார்க்க பேலோட் (அறிவியல் கருவி) சேர்ப்பதாக இஸ்ரோ உறுதியளித்தது. ஆனால், பின்னர் ISRO உறுதியளித்தபடி பேலோட் சேர்க்கவில்லை. நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் மனுக்களுக்கு பதிலளிக்கவில்லை.

மேலும் NASA, CIA தாங்கள் சொல்வதுபோல் இந்தியாவை, கேட்க வைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் , சந்திரயான்-2 மிஷன் உண்மையிலேயே தோல்வி அடைந்ததா? என்பது குறித்து விண்வெளி ஆராய்ச்சி துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு குறித்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்திடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க, மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நிதி நிறுவன முறைகேடு: 16 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

Last Updated : Dec 3, 2022, 10:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.