ETV Bharat / state

பேருந்து நிலையங்களில் கைப்பை திருடிய குற்றவாளி - 16 பவுன் தங்க நகை பறிமுதல் - வழிபறி

மதுரை மாநகர பேருந்து நிலையங்களில் கைப்பை திருடும் குற்றவாளியை கைது செய்த காவல் துறையினர் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

hand bag thief arrested by madurai police  robbery  madurai police  madurai news  madurai latest news  theft  மதுரை செய்திகள்  பேருந்து நிலையங்களில் கைப்பை திருடிய குற்றவாளி கைது  மதுரையில் பேருந்து நிலையங்களில் கைப்பை திருடிய குற்றவாளி கைது  பிடிபட்ட திருடன்  திருடன்  வழிபறி  குற்றவாளி
குற்றவாளி
author img

By

Published : Aug 2, 2021, 10:43 PM IST

மதுரை: பேருந்து நிலையங்களிலும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடமும் கை பைகளை திருடும் சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தத் திருட்டில் தொடர்புடைய குற்றவாளியைக் கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையாளர் ராஜசேகரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட குற்றவாளி

இந்நிலையில் பயணிகளிடம் கைப்பைகளை திருடும் பழங் குற்றவாளியான பாலசுப்பிரமணி என்ற சுப்புக்காளையை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மதுரை மாநகர பேருந்து நிலையங்களில் பயணிகளிடமிருந்து கைப்பைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரிடமிருந்து 5 வழக்குகளில் தொடர்புடைய சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் தங்க நகைகள், 4 மடி கணினிகள், 5 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

குற்றவாளிக்கு சிறை - போலீஸாருக்கு பாராட்டு

இதனை தொடர்ந்து குற்றவாளி சுப்புக்காளையை நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை காவல் துறையினரை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேமானந்த் சின்கா பாராட்டினார்.

இதையும் படிங்க: மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.