ETV Bharat / state

போலீசுக்கு பயந்து, ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்! - மதுரை மாவட்டச் செய்திகள்

மதுரை அருகே குட்கா கடத்திச்சென்ற இளைஞர், போலீசுக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்ப முயன்ற போது உயிரிழந்தார்.

gutkha-smuggler-died-jumped-from-the-train-in-fear-of-the-police
போலீசுக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்!
author img

By

Published : Aug 9, 2021, 10:05 PM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் அராஃபத். தனது, நண்பர்கள் ஜக்காரியா, அகமது சிராஜுதீன், ஜெயின் அலாவுதீன் ஆகியோருடன் பெங்களூர் சென்று குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை வாங்கிக்கொண்டு மைசூர்-தூத்துக்குடி செல்லும் ரயிலில் மதுரை நோக்கி பயணம் செய்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருக்கும்போது, ரயில்வே காவலர்கள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, 100 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்ததாக சிக்கந்தர் அராஃபத்தின் நண்பர்களிடம் ரயில்வே காவலர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த சிக்கந்தர், ரயில்வே காவலர்களிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். இதில், தவறி தண்டவாளத்தில் விழுந்த அவர் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 100 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘ஒரு மாதத்திற்குள் குட்கா கடத்தல் விற்பனை முடிவுக்கு வரும்’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.