ETV Bharat / state

கிடா விருந்தில் தகராறு - திடீர் துப்பாக்கி சூட்டால் பரபரப்பு.. - துப்பாக்கி சூடு

மதுரை அருகே கோயில் கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை
மதுரை
author img

By

Published : Nov 14, 2022, 6:58 AM IST

மதுரை: திருமங்கலம் அருகே உள்ள காட்டு பத்திரகாளி அம்மன் கோயிலில் கிடா விருந்து நடைபெற்றது. பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்து கிடா விருந்தில் கலந்து கொண்டனர். விருந்துக்கு மது போதையில் வந்த கணபதி என்பருக்கும் தனசேகரன் என்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதமாக முற்றிய நிலையில், இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். கோபத்தில் தனசேகரன் தன்னிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து கணபதியை சுட முயற்சித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் தடுத்ததால் அதிர்ஷ்டவசமாக கணபதி உயிர் பிழைத்தார்.

திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் விருந்துக்கு வந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். துப்பாக்கிச் சூடு குறித்து பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்து தனசேகரை கைது செய்தனர்.

துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: T20 World Cup:பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.