ETV Bharat / state

துப்பாக்கியை துடைக்கும்போது எதிர்பாராத விதமாக உயிரிழந்தாரா முன்னாள் ராணுவ வீரர்? - பொத்தானியாபுரம்

Ex Army man Death: துப்பாக்கியை துடைக்கும்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றும் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் மதுரை, பொத்தானியாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gun-cleaning-unexpected-firing-ex-army-man-death
துப்பாக்கியை துடைக்கும் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 10:56 PM IST

மதுரை: மதுரை, பொத்தானியாபுரம் தாமஸ் வீதியில் வசித்து வருபவர், ராஜேந்திரன். இவர் இந்திய ராணுவத்தில் கடந்த 23 ஆண்டுகளாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில், தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 20 நாட்களாக அந்த பணிக்கு ராஜேந்திரன் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை காவல் நிலையத்தில் வழங்குவதற்காக தனது வீட்டின் மொட்டை மாடியில், அந்த துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.

அந்த நேரம், தவறுதலாக துப்பாக்கியின் விசைப்பகுதியில் கைபட்டு வயிற்றுப் பகுதியில் சுட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து, ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜேந்திரனை மீட்டு, அவரது குடும்பத்தார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மதுரை, கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தை காவல் துறையினர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதில் முதற்கட்டமாக எதிர்பாராத வகையில் துப்பாக்கி வெடித்ததா அல்லது தற்கொலை முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜேந்திரன் குடும்ப உறுப்பினர்களிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கானாத்தூர் அருகே கடலில் மாயமான 4 பேர் சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.