ETV Bharat / state

குரூப் 1 தேர்வு வழக்கு மாற்றம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை - அரசு தேர்வு

மதுரை: பார்வை குறைபாடு உடையவர் குரூப் 1 தேர்வு எழுத அனுமதி கோரிய வழக்கினை, அது தொடர்புடைய நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court madurai bench
author img

By

Published : Jul 10, 2019, 10:55 PM IST

இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுலம் பகுதியைச் சேர்ந்த நயினார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் 100% பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளி. கடந்த 2010ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து படித்தேன். இந்த படிப்பு 10, 12ஆம் வகுப்புக்கு இணையானது என அரசு அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பி. காம் முடித்தேன்.

குரூப் 4, 2 தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றேன். பணி நியமனத்திற்காக காத்திருக்கிறேன். இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த குரூப் 1 தொடக்க நிலை தேர்வில் வெற்றி பெற்றேன். அடுத்தக் கட்டமாக முக்கிய தேர்வு வருகிற ஜூலை 12-14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தேர்விற்கான அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முயன்றபோது, அனுமதிச் சீட்டை பெற இயலவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி பல்கலைக்கழகத்தில் படித்த பவுண்டேஷன் கோர்ஸில் படித்த 10,12ஆம் வகுப்புக்கு இணை ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நான் குரூப் 2, 4 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது குரூப் 1 முக்கிய தேர்விற்கு தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த தகவல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே நான் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வினை எழுத அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மதுரைக் கிளையில் அரசுப்போட்டித் தேர்வு தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி முன்பாக வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.

Intro:குரூப் 1 தேர்வு எழுத கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

வரும் ஜூலை 12ல் நடைபெறவுள்ள குரூப் 1 மெயின் தேர்வினை எழுத அனுமதி வழங்கக் கோரிய வழக்கினை தொடர்புடைய நீதிபதியின் முன் விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு . Body:குரூப் 1 தேர்வு எழுத கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

வரும் ஜூலை 12ல் நடைபெறவுள்ள குரூப் 1 மெயின் தேர்வினை எழுத அனுமதி வழங்கக் கோரிய வழக்கினை தொடர்புடைய நீதிபதியின் முன் விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு .

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுலம் பகுதியைச் சேர்ந்த நயினார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் 100% பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளி. கடந்த 2003ம் ஆண்டு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தேன்,அப்போது குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை .

இதை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் Foundation courseல் சேர்ந்து படித்தேன். இந்த படிப்பு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையானது என அரசு அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து
B. Com. முடித்தேன்.

அதன் பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றேன். பணி நியமனத்திற்காக காத்திருக்கிறேன். இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த குரூப் 1 தொடக்க நிலை தேர்வில் வெற்றி பெற்றேன். அடுத்த கட்டமாக பிரதான மெயின் தேர்வு வருகிற ஜூலை 12 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து மெயின் தேர்வுக்கு தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து, மெயின் தேர்விற்கான அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முயன்ற போது, அனுமதிச் சீட்டை பெற இயலவில்லை. நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதில் கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி பல்கலைக்கழகத்தில் படித்த foundation course 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணை ஆகாது என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறினர். ஏற்கனவே நான் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது குரூப் 1 மெயின் தேர்விற்கு தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த தகவல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே நான் ஜூலை 12ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 மெயின் தேர்வினை எழுத அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மதுரைக் கிளையில் அரசுப்போட்டித் தேர்வு தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி முன்பாக வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.