ETV Bharat / state

ஜல்லிக்கட்டில் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவு..! - court news

Madurai Jallikattu: ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் கோரிக்கையை பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

madurai high court
madurai high court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 10:59 PM IST

மதுரை: மதுரை மானகிரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதித்த பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பின் தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வருகிறது.

இந்நிலையில், மதுரையில் பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பு வாய்ந்தவை. 2019ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மத ரீதியாக நடத்தக்கூடாது.

காளைகள் அவிழ்க்கப்படும் போது உரிமையாளர்களின் பெயர்களோடு சாதிப்பெயரைப் பயன்படுத்தி அறிவிக்கக்கூடாது. கடந்த காலங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகள் முன்பாகவே சாதிப்பெயர்களோடு காளைகள் அவிழ்க்கப்படுகின்றன. இது உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.

ஆகவே இந்தாண்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் குறித்த அறிவிப்பின் போது உரிமையாளர்களின் பெயரோடு சாதிப்பெயர்களை அறிவிக்கக்கூடாது எனவும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜன.04) நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் உரிமையாளர் பெயர் வாசிக்கப்படும் அப்பொழுது குறிப்பிட்ட சாதியின் பெயர்களைச் சொல்லி காளை அவிழ்த்து விடப்படுகிறது.

இவ்வாறு செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் பின்பற்றுவதில்லை, முறையாகப் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் தீண்டாமை உறுதிமொழி எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற தீர்ப்பை முறையாகப் பின்பற்றுவோம் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சாதிப் பெயர் சொல்லி காளை அவிழ்க்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் மனுவைப் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கேலோ இந்தியா போட்டி தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுத்த உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.