ETV Bharat / state

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தவறு - உயர் நீதிமன்றம்

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தவறு, அரசு அலுவலக பயன்பாட்டிற்கென தனி செல்ஃபோன் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Mar 15, 2022, 12:15 PM IST

திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராதிகா. இவர், தனக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்கம் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 15) நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதும், அதன்மூலம் வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஏதேனும் அவசரம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாகவும், அலுவலக நேரத்தில் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழலில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர், அரசு அலுவலர்கள் விதிகளை உருவாக்க வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் நான்கு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜாமீன் பெற புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.