மதுரை பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மோகன் இன்று (மார்ச் 10)காலை இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து பெரியார் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரியாபட்டியிலிருந்து பெரியார் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்ட விரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவர்கள் கைது