ETV Bharat / state

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி: மதுரையில் பரபரப்பு - madurai latest news

விபத்துக்குள்ளான பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

government-bus-confiscated
government-bus-confiscated
author img

By

Published : Sep 24, 2021, 9:59 AM IST

மதுரை: ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி மாலதி 2017ஆம் ஆண்டு பழனி முருகன் கோயிலுக்கு உறவினர்களுடன் பாத யாத்திரையாகச் சென்றுள்ளனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மாலதி சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதி படுகாயம் அடைந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், கவனக்குறைவாக அரசுப் பேருந்தைச் செலுத்தியதால் மாலதி உயிரிழந்ததாகக் கூறி, அவருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் மாலதிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுப் பேருந்து ஜப்தி

இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியதால் மதுரை மாவட்ட நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கோவை பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்தை மாலதியின் கணவர், வழக்கறிஞர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

இதையும் படிங்க : கற்பூர வியாபாரிக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.