மதுரை தல்லாகுளம் பொறியாளர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் மே 13ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்ற அவர், வீட்டிற்குத் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்படிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு உள்ளே சென்று சோதனை செய்தபோது, 24 பவுன் நகை, 12 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
பின்னர் அவர் இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். வழக்கப்பதிவு செய்த காவல் துறையினர் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.