மதுரை விமான நிலையத்தில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
பணிகள் தாமதமாவதால் மக்கள் அவதியடைகின்றனர். பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அச்சம் கொள்கிறது. தேர்தல் நடத்தவிடக்கூடாது என்பதற்கான வழிவகைகளை தேடுவது தவறான செயல். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படுகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: '53,059 வீடுகளில் குப்பைத் தரம் பிரித்து வழங்கல்' - மாநகராட்சி ஆணையர் தகவல்