ETV Bharat / state

சந்தர்ப்பவாதிகளுக்கு வேல் கை கொடுக்காது - ஜி.கே. வாசன் பேட்டி - The success of the AIADMK alliance is very bright

மதுரை: சந்தர்ப்பவாதிகளுக்கு வேல் கை கொடுக்காது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.

gk-vasan
gk-vasan
author img

By

Published : Feb 16, 2021, 6:36 AM IST

Updated : Feb 16, 2021, 7:49 AM IST

மதுரையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமாகா” அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அதிமுக கூட்டணி வெற்றி மிக பிரகாசமாக உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் அவசியமானது. மீனவர்கள் பிரச்னைகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஒரு சிலரின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் தவறான வழியில் கொண்டு செல்லப்படுகிறார்கள். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். திமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து சுமுகமாக பேசுவோம்.

அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு வந்த பிறகு பேசுவோம். யார் வெளியே வந்தாலும் அதிமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது, சந்தர்ப்பங்களுக்காக வேலை கையில் எடுப்பவர்களுக்கு வேல் கை கொடுக்காது" என்றார்.

இதையும் படிங்க: பிப்.17 முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் - திமுக அறிவிப்பு

Last Updated : Feb 16, 2021, 7:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.