ETV Bharat / state

மௌனத்தின் சாட்சியாய் காந்தி சிந்திய ரத்தம் இன்றும் மதுரையில்...! - நாதுராம் கோட்ஸே

மதுரை : தீவிர இந்துத்துவவாதியான நாதுராம் கோட்ஸேவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தேசத்தந்தை காந்தியடிகளின் ரத்தம் தோய்ந்த  உடைகளைச் சுமந்துகொண்டு மௌன சாட்சியாய் திகழ்கிறது மதுரை மண்.

Gandhi's shed blood in Madurai today as a witness of silence ...!
மௌனத்தின் சாட்சியாய் காந்தி சிந்திய ரத்தம் இன்றும் மதுரையில்...!
author img

By

Published : Jan 30, 2020, 1:52 PM IST

தேசத்தின் தந்தை காந்தியடிகள் இந்துத்துவவாதி கோட்ஸேவால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட நாள் இன்று. அவரது ரத்தம் தோய்ந்த உடைகளைச் சுமந்துகொண்டு மௌன சாட்சியாய் திகழ்கிறது மதுரை மண்.

இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலைக்குப் பின்னர் 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் தனது ஆசிரமத்தில் வழிபாட்டிற்குச் செல்லும் வழியில் டெல்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் மாலை 5.17 மணி அளவில் நாதுராம் கோட்ஸே என்ற பயங்கரவாதியால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டார்.

உயிர்ப்போகும் தருணத்திலும்கூட 'ஹே ராம்...' என்றவாறே உலகிற்கு அஹிம்சையைக் கற்றுக் கொடுத்த அம்மகத்தான மனிதன் இந்த மண்ணில் சாய்ந்தார். உலகமே அன்று பேரதிர்ச்சியில் ஆழ்ந்தது. அந்த நாளின் கறுப்புப் பக்கங்களை ஒவ்வொரு ஆண்டும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.

காந்தி என்ற மனிதனை அரையாடைப் பக்கிரியாக உலகிற்கு அடையாளம் காட்டி மகாத்மாவாக மாற்றிய மதுரை மண்ணில், அவரது குருதி தோய்ந்த உடையும், அந்த நேரம் காந்தி அணிந்திருந்த ஆடைகளும் இன்றும் மௌன சாட்சியாய் நிற்கின்றன.

மகாத்மாவின் மறைவிற்குப் பிறகு இந்தியாவின் முதல் அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவால் 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது.

மௌனத்தின் சாட்சியாய் காந்தி சிந்திய ரத்தம் இன்றும் மதுரையில்...!

அப்போது காந்தியின் பயன்படுத்திய பொருள்கள், படித்த நூல்கள், ஆடைகள், சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் அணிந்திருந்த உடை, சால்வைகள் இந்த அருங்காட்சியகத்திற்குத்தான் வழங்கப்பட்டன.

டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தைப் போன்றே மாதிரியாகக் கட்டப்பட்ட கல்லறையும் காந்தியின் அஸ்தியை சுமந்தவாறே மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ளது.

மிக அமைதியான சூழலில் காந்தியின் குருதிதோய்ந்த ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாகம் நேர்த்தியாகத் தற்போதும் பராமரித்துவருகிறது.

Gandhi's shed blood in Madurai today as a witness of silence ...!
மௌனத்தின் சாட்சியாய் காந்தி சிந்திய ரத்தம் இன்றும் மதுரையில்...!

'சுடப்பட்டு நான் மரணம் அடைய நேர்ந்தால் முணு முணுக்காமல் குண்டடியை ஏற்று இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே உயிர் நீக்க வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய குறிக்கோளுக்கேற்ப வாழ்ந்தவனாவேன்' என்னும் காந்தியின் வாக்கு மூலம் அத்திருவறையின் முன்பாக எழுதப்பட்டு, அவர் கொண்ட லட்சிய வேட்கையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

காந்தி என்னும் மாமனிதன் மறைந்து 26 ஆயிரத்து 298 நாள்களைக் கடந்த பின்னரும்கூட அவரை நாம் நினைக்கிறோம், வாசிக்கிறோம் என்றால்... அந்தத் தாக்கத்தை எந்த அளவுகோல் கொண்டும் அளவிட முடியாது.

வாழ்க நீ எம்மான்...
வையத்து நாட்டிலெல்லாம்...
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்...
புவிக்குள்ளே முதன்மையுற்றாய்...

Intro:காந்தி சிந்திய ரத்தம் இன்றும் மதுரையில்... மௌன சாட்சியாய்...

தேசத்தின் பிதா காந்தியடிகள் இந்து பயங்கரவாதி கோட்சேவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. அவரது ரத்தம் தோய்ந்த உடைகளைச் சுமந்து கொண்டு மௌன சாட்சியாய் திகழ்கிறது மதுரை மண்.
Body:காந்தி சிந்திய ரத்தம் இன்றும் மதுரையில்... மௌன சாட்சியாய்...

தேசத்தின் பிதா காந்தியடிகள் இந்து பயங்கரவாதி கோட்சேவால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. அவரது ரத்தம் தோய்ந்த உடைகளைச் சுமந்து கொண்டு மௌன சாட்சியாய் திகழ்கிறது மதுரை மண்.

நாடு விடுதலையடைந்த பின்னர் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் நாள் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் கோட்சே என்ற இந்து பயங்கரவாதியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

'ஹே ராம்...' என்றவாறே உலகிற்கு அஹிம்சையைக் கற்றுக் கொடுத்த அம் மகத்தான மனிதன் இந்த மண்ணில் சாய்ந்தார். உலகமே அன்று பேரதிர்ச்சியில் ஆழ்ந்தது. அந்த நாளின் கருப்புப் பக்கங்களை ஒவ்வொரு ஆண்டும் நாம் அனுசரித்துக் கொண்டிருக்கிறோம்.

காந்தி என்ற மனிதனை அரையாடைப் பக்கிரியாக உலகிற்கு அடையாளம் காட்டி மகாத்மாவாக மாற்றிய மதுரை மண்ணில், அவரது குருதி தோய்ந்த உடையும், அந்த நேரம் காந்தி அணிந்திருந்த ஆடைகளும் இன்றும் மௌன சாட்சியாய் நிற்கின்றன.

மகாத்மாவின் மறைவிற்குப் பிறகு இந்தியாவின் முதல் அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அன்றைய இந்தியப் பிரதமர் நேருவால் கடந்த 1959-ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது.

அப்போது காந்தியின் பயன்படுத்திய பொருட்கள், படித்த நூல்கள், ஆடைகள், சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் அணிந்திருந்த உடை மற்றும் சால்வைகள் இந்த அருங்காட்சியகத்திற்குதான் வழங்கப்பட்டன.

புதுதில்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தைப் போன்றே மாதிரியாகக் கட்டப்பட்ட கல்லறையும் காந்தியின் அஸ்தியை சுமந்தவாறே மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ளது.

மிக அமைதியான சூழலில் காந்தியின் குருதி தோய்ந்த ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையை மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நிர்வாகம் நேர்த்தியாகத் தற்போதும் பராமரித்து வருகிறது.

'சுடப்பட்டு நான் மரணம் அடைய நேர்ந்தால் முணு முணுக்காமல் குண்டடியை ஏற்று இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே உயிர் நீக்க வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய குறிக்கோளுக்கேற்ப வாழ்ந்தவனாவேன்' எனும் காந்தியின் வாக்கு மூலம் அத்திருவறையின் முன்பாக எழுதப்பட்டு, அவர் கொண்ட இலட்சிய வேட்கையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

காந்தி எனும் மாமனிதன் மறைந்து 26 ஆயிரத்து 298 நாட்களைக் கடந்த பின்னரும்கூட அவரை நாம் நினைக்கிறோம், வாசிக்கிறோம் என்றால், அந்தத் தாக்கத்தை எந்த அளவுகோல் கொண்டும் அளவிட முடியாது.

வாழ்க நீ எம்மான்... வையத்து நாட்டிலெல்லாம்...
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்... புவிக்குளே முதன்மையுற்றாய்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.