மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வசந்த நகரில் பாபு (37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சொந்தமாக பர்னிச்சர் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது. இந்நிலையில் நேற்று (மார்ச்.16) குப்பையில் எரிந்து கொண்டிருந்த தீ, திடீரென பாபுவின் பர்னிச்சர் கடைக்குள் பரவியதால் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதனால் கடை முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அனுப்பானடி தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் பொருள்கள் சேதமகின. தீ விபத்து குறித்து அவனியாபுரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஈ.வி.கே.எஸ். மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை