ETV Bharat / state

ஒரே நாளில் நான்கு ஆக்ஸிஜன் ரயில்கள் வருகை! - today news

தமிழ்நாட்டிற்கு இதுவரை 18 சிறப்பு ரயில்கள் மூலம் 1,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வே
தென்னக ரயில்வே
author img

By

Published : May 24, 2021, 1:53 PM IST

மதுரை: ஞாயிற்றுக்கிழமையான நேற்று(மே.23) ஒரே நாளில் நான்கு ஆக்ஸிஜன் ரயில்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளன. தெற்கு ரயில்வே, தமிழ்நாட்டிற்கு இதுவரை 18 சிறப்பு ரயில்கள் மூலம் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கியுள்ளது.

நேற்று(மே.23) ஒரே நாளில் தமிழ்நாட்டிற்கான 15, 16, 17, 18 ஆவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து வந்தன.

இந்த ரயில்களில், ஆறு டேங்கர்களில் 86.98 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும், நான்கு பெட்டகங்களில் 84.1 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும், 3 பெட்டகங்களில் 64.3 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும், மூன்று டேங்கர்களில் 19.54 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும் வந்துள்ளன.

சென்னை தண்டையார்பேட்டை ரயில்வே பெட்டக நிலையத்தில், 13 ஆக்ஸிஜன் ரயில்கள் கையாளப்பட்டு 785.87 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளது.

அதேபோல கோயம்புத்தூர் மதுக்கரையில், இரண்டு ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் கையாளப்பட்டு 48.78 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வாடிப்பட்டி, தூத்துக்குடி, மீளவிட்டான், சென்னை, திருவள்ளூர் ரயில் நிலையங்களில் தலா ஒரு ஆக்ஸிஜன் ரயில் விரைவில் கையாளப்பட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு 189.53 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்படவுள்ளது.

இந்திய ரயில்வே 234 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி, அதன்மூலம் 936 டேங்கர்களில் 15,284 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 614 மெட்ரிக் டன்னும், உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 3,609 மெட்ரிக் டன்னும், மத்தியப் பிரதேசத்திற்கு 566 மெட்ரிக் டன்னும், டெல்லிக்கு 4,300 மெட்ரிக் டன்னும், ஹரியானாவிற்கு 1,759 மெட்ரிக் டன்னும், ராஜஸ்தானுக்கு 98 மெட்ரிக் டன்னும், கர்நாடகாவிற்கு 1,063 மெட்ரிக் டன்னும், உத்தரகாண்டிற்கு 320 மெட்ரிக் டன்னும், தமிழ்நாட்டிற்கு 1,024 மெட்ரிக் டன்னும், ஆந்திராவிற்கு 642 மெட்ரிக் டன்னும், பஞ்சாபிற்கு 153 மெட்ரிக் டன்னும், கேரளாவுக்கு 246.56 மெட்ரிக் டன்னும், தெலுங்கானாவிற்கு 976 மெட்ரிக் டன்னும் அஸ்ஸாமிற்கு 80 மெட்ரிக் டன்னும் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ரயில்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.