மதுரை அண்ணாநகர்ப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த மே 12ஆம் தேதி கரோனா நிவாரணத்திற்காக வைத்திருந்த அரிசி மூட்டைகளை, ஆம்னி வேன் மூலம் கடத்துவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வேகமாகப் பரவியது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் எனப் பல்வேறு துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடையில் பணியாற்றிய விற்பனையாளர் காந்திமதி, விஜயா இருவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அரிசி கடத்திச் சென்றதாக சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கார் டிரைவர் விக்னேஷ்வரன், லோடுமேன் மணிகண்டன், விற்பனையாளர் விஜயாவை காவல்துறையினர், கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள காந்திமதி மற்றும் லோடுமேன் வீரபாண்டி ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'- சமையலில் களமிறங்கிய சிம்பு!