ETV Bharat / state

"கருணாநிதி நாடு என்று கூட தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டிவிடுவார்கள்" - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு - madurai news

Former Minister RB Udayakumar: நூலகங்கள், மைதானங்கள், ஜல்லிக்கட்டு திடல் என அனைத்திற்கும் கருணாநிதி பெயரைச் சூடுகிறார்கள். இப்படியே சென்றால், கருணாநிதி நாடு என்று கூட தமிழகத்தைப் பெயர் மாற்றம் செய்து விடுவார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

RB Udayakumar
ஆர் பி உதயகுமார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 3:15 PM IST

ஆர் பி உதயகுமார்

மதுரை: முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் காணொளி வாயிலாகச் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் கடன் சுமை வளருகிறது. திமுக ஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டு முதல் கடன் சுமையை ஒப்பிட்டுப் பார்த்தால் 2021-22ஆம் ஆண்டில் கடன் தொகை ரூ.5,18,796 கோடியும், 2022-2023ஆம் ஆண்டில் கடன் தொகை ரூ.6,30,000 கோடியும், 2023-2024ஆம் ஆண்டில் கடன் தொகை ரூ.7,28,000 கோடியாக உள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் கரோனா மற்றும் ஜிஎஸ்டி வரி இழப்பைத் தாண்டி வாங்கிய கடன் சதவீதம் ஜிடிபி அளவில் 21.22 சதவீதம் தான். ஆனால் சொத்து வரி, மின்சார கட்டணம் மற்றும் இன்றைக்கு விலைவாசி ஆகியவற்றை உயர்த்தி, மக்களை அனைத்து துன்பங்களிலும் ஈடுபடுத்தி எந்த விதமான வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல், சமூக நலத்திட்டங்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு, எந்த விதமான கட்டமைப்புகளையும் உருவாக்காமல் திமுக அரசு வாங்கிய கடன் ஜிடிபி அளவில் 26 சதவீதமாகும்.

மேலும், அதிமுக ஆட்சியில் பொருளாதார மாநிலங்களாக மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது 15.7 சதவீத ஜிடிபி பங்களிப்பு கொண்டு மகாராஷ்டிரா முதலாவது இடத்திலும், முன்னர் 5ஆவது இடத்தில் இருந்த உத்தரப்பிரதேச மாநிலம் 9.2 சதவீத ஜிடிபி பங்களிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், 9.1 சதவீத ஜிடிபி பங்களிப்பைக் கொண்ட தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2019ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி அளவில் முதலீட்டை ஈர்த்து, 10.5 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு 79 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.52,069 கோடி முதலீட்டை ஈர்த்து 1,24,829 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்யப்பட்டது. அதேபோல், வெளிநாட்டுப் பயணத்தின் போது 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அதன் மூலம், ரூ.8,835 கோடி முதலீட்டை ஈர்த்து 35,520 வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. இதனால், கரோனா காலத்திலும் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையாகத் திகழ்ந்தது.

தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நிதிப் பற்றாக்குறையாக உள்ளது, இப்படி இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் தனது தந்தையார் பெயரில் மாவட்டந்தோறும் சிலை வைக்கிறார். கடலில் பேனா, நூலகங்கள், மைதானங்கள், ஜல்லிக்கட்டு திடல் என அனைத்திற்கும் கருணாநிதி பெயரை சூடுகிறார்கள். இப்படியே சென்றால், கருணாநிதி நாடு என்று கூட தமிழகத்தைப் பெயர் மாற்றம் செய்து விடுவார்கள்" என வரிசையாகக் குற்றங்களை அடுக்கியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு… ஆந்திர அரசியலில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.