ETV Bharat / state

வனப்பகுதிகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் கருத்து

மதுரை: குடிநீர் என்பது பக்தர்களுக்கும், வன உயிரினங்களும் இன்றியமையாதது என்றாலும், அதற்காக வனப் பகுதிகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

highcourt
author img

By

Published : Apr 2, 2019, 10:11 PM IST

சென்னையைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட விஷேச தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதாலும், பருவ மழை சரிவர பெய்யாததாலும் சதுரகிரி மலையில் கடும் வறட்சி நிலவுகிறது.

இதனால், இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழு, போதிய காவல்துறை பாதுகாப்பு, முறையான அவசரகால மருத்துவ வசதி, பாதுகாப்பான தங்கும் வசதி, சாலை பராமரிப்பு, போதிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்ததாகவும், அதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, விருதுநகர் மாவட்டத்தின் சதுரகரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்க கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், இவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதன்பின், குடிநீர் என்பது பக்தர்களுக்கும், வன உயிரினங்களும் இன்றியமையாதது என்றாலும், இதற்காக வனப் பகுதிகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

குடிநீர் என்பது பக்தர்களுக்கும், வன உயிரினங்களும் இன்றியமையாதது தான். இதற்காக வனப் பகுதிகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து.

சதுரகிரி மலைப் பகுதியில்  வன விலங்குகளுக்கு   குடிநீர் பிரச்சனையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வனத்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு உத்தரவு .

சென்னையைச் சேர்ந்ததிருத்தொண்டர்கள் சபை நிறுவனர் இராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதில்," மதுரை சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்தமான கோயிலாகும். 

இந்த கோயிலில் ஒவ்வொரு அமாவாசை, பெளர்ணமி மற்றும் விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வருபவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயது முதிந்தோர், மாற்றுதிறனாளிகள் என அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. 

மேலும் பருவகால மழை சரிவர இல்லாததால்,சதுரகிரி மலை கடும் வறட்சியாக உள்ளது.

 எனவே இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழு, போதிய காவல்துறை பாதுகாப்பு, முறையான அவசரகால மருத்துவ வசதி, பாதுகாப்பான தங்கும் வசதி,சாலை பராமரிப்பு, போதிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மதுரை ,விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இந்து அறநிலைய துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தேன் இது வரையில் நடவடிக்கை இல்லை. எனவே சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிபடை வசதிகள் செய்து தர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு ," மாதத்தில் 4 நாள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

 இவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று வனத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும் குடிநீர் என்பது பக்தர்களுக்கும், வன உயிரினங்களும் இன்றியமையாதது தான். இதற்காக வனப் பகுதிகளை சிதைப்பதை அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த
 நீதிபதிகள், சதுரகிரி மலைப் பகுதியில் வன விலங்குகளுக்கு   குடிநீர் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.