மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கப்பலூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் குடோனில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் 500 பேருக்கு காய்கறி மற்றும் அரிசி தொகுப்பினை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 2 கோடியே 50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தொகுப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்டம் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை, தியாகராஜா பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை வணிக வளாகத்தில் உணவுகள் தயாரிக்கப்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான பழச்சாறுகள், காய்கறி வகைகள் மூன்று வேளையும் வழங்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'எனது கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து, உதவி செய்த ஈடிவிக்கு ரொம்ப நன்றி'