ETV Bharat / state

'ராஜா ராணியாக நடித்தாலும் நலிந்து கிடக்கிறது எங்கள் வாழ்க்கை' - வறுமையின் பிடியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் - ராஜா ராணி போல் எங்கள் வாழ்க்கை இல்லை

மதுரை: மேடைகள் தோறும் ராஜா ராணியாக நடித்து மக்களை மகிழ்வித்தாலும் எங்களின் வாழ்க்கை யாராலும் கண்டுகொள்ளப்படாமல் நலிவடைந்து கிடக்கிறது என்கிறார்கள் ராஜா ராணி ஆட்டக் கலைஞர்கள்...

raja rani folk dance
raja rani folk dance
author img

By

Published : Aug 1, 2020, 4:53 AM IST

Updated : Aug 1, 2020, 3:28 PM IST

நாட்டுப்புறக் கலை என்பது ஒரு நாட்டின் பண்பாட்டையும், சமூகம் சார்ந்த பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் கால கண்ணாடி. சில கலைகள் தெய்வ வழிபாட்டோடு, சமூக வாழ்வியலோடும், சமூக மரபுகளோடும் ஒன்றிணைந்து தொடர்புபடுத்தப்படுகின்றன. ஆனால், மக்களைக் குதூகலிக்க வைக்கும் நாட்டுப்புறக் கலைகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று தனித்துவமான சிறப்பைப் பெற்றுள்ளன.

நாட்டுப்புறக் கலைகள் தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது. அதிலும், கரகாட்டத்தின் மறு உருவமான ராஜா ராணி ஆட்டம் தெற்குச் சீமையில் மிகவும் பிரபலமான ஒன்று. மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் ராஜா ராணி ஆட்டங்களைக் கண்டு ரசிக்கலாம். திருவிழாக் காலம் வந்துவிட்டால் போதும், மண் சார்ந்த கலைகள் மக்களின் இதயமாய் நிலைபெற்று நிற்கும். நையாண்டி மேளத்துடன் ஆண், பெண் கூடி குழுமி ஊர்க் கதை, உலகக் கதையே அளந்து பேசும் அளவிற்கு மக்களை ஆனந்தக் கடலில் ஆழ்த்துவார்கள்.

ஆனால், தற்போது நீடித்துவரும் பொதுமுடக்கத்தால் ராஜா ராணி ஆட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதம் கூத்து, ஆறு மாதம் பயிற்சி இப்படித்தான் அவர்களது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. கலைகள் நடத்த வாய்ப்புகள் இல்லையென்றாலும், அவர்கள் வசிக்கும் தெருவே அதிர நாள்தோறும் பயிற்சி எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்தக் கலையைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வும், அதீத காதலும்தான் அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது.

அரசு அறிவித்த விலையில்லா அரிசி திட்டத்தால் வயிற்றுப்பாட்டுக்கு பிரச்னை இல்லையென்றாலும், தங்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலையோடு நாள்களைக் கடத்தும் ராஜா ராணி ஆட்டக் கலைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

மதுரை உசிலம்பட்டி அருகே உள்ளது சூலப்புரம் ஊராட்சி.

'தானே...

தன்னானே...

தானே தன்னே தன்னானே', என்று கணீரென ஒலிக்கிறது அந்தக் கிராமத்து நாடார் பள்ளியின் பின்புறம் உள்ள அருந்ததியர் தெருவில் வசித்துவரும் ராஜா ராணி ஆட்டக் கலைஞர்களின் பாடல். மெல்லிசைக் குரல்கள் செவியை வந்து சேர்கின்றன. ஆட்டக் கலைஞர் பாண்டியன் வீட்டில் ஒலிக்கும் இந்தப் பாடலோடு, விறுவிறுப்பாய் பயிற்சிக்கு தயாராகிறார்கள் கலைஞர்கள்.

பேராசிரியர் சென்றாயப் பெருமாள்
பேராசிரியர் சென்றாயப் பெருமாள்

மதுரை சூலப்புரம் மகாலிங்கம் சகோதரர்கள் குழு என்றால், இவர்களைத் தெரியாத ஒருவர்கூட தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் இருக்க மாட்டார்கள். ராஜா ராணி, ஆட்டக் கலை என்றால் அவர்கள்தான் ராஜாக்கள் ராணிகள். சகோதரர்களே ராணிகளாக பெண் வேடமிட்டு நடித்து அசத்துவார்கள்.

வாழ்ந்துமடிந்த அரசன் கதை, நல்லதங்காள் கதை முதல் அரியலூர் ரயில் விபத்து, மதுரை சரஸ்வதி பள்ளிக் கட்டடம் இடிந்த விபத்து, தற்போதைய கரோனா பாதிப்பு வரை அனைத்தையும் விழிப்புணர்வாக நிகழ்த்துகிறார்கள். ஆனால், தற்போது நீடித்துவரும் பொதுமுடக்கம் அவர்களது வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது.

இதுகுறித்து கோமாளி கலைஞர் பிலாவடி கூறியதாவது, "எங்களது நிகழ்ச்சியில் நகைச்சுவையும் உண்டு. நல்ல பல கருத்துகளும் உண்டு. புராணக் கதைகள் மட்டுமின்றி சுனாமியால் பாதித்த சம்பவங்களையும் நாங்கள் கூறுகிறோம். எங்களது கலையின் வழியாக மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

தனது தந்தையார் பெருமாள் மூலமாக இந்தக் கலையைக் கற்றுக் கொண்டதைக் குழுவின் தலைவர் மகாலிங்கம் பெருமையுடன் பகிர்ந்தார். இவருடன் பிலாவடி பாண்டி, முத்துராஜ், தவில் கலைஞர் பிச்சை ஆகியோர் இணைந்து இந்தக் கலையில் ஈடுபட்டுவருகின்றனர். ராஜா, ராணி ஆட்டத்தைக் காணுகையில் நாமும் கூட சேர்ந்து ஆடுவது போன்ற ஒரு மாயை நம்மைப் பிரமிக்க வைக்கும். ஆட்டத்தோடு சேர்ந்து கதைகதையாய் பேசும் வசனங்களைப் பார்வையாளர்கள் சிலாகிப்பார்கள். பாட்டும், நடனமும் இரு கண்களையும் அசர வைக்கும்.

கணவன் மனைவி போலத்தான் ராஜா ராணி ஆட்டமும், ஜோடியில்லாத வாழ்க்கை ஜாடி இல்லாத மூடி போலத்தான் இருக்கும். இந்தக் கலை குறித்து பெண் வேடக் கலைஞர் பாண்டி கூறியதாவது, "கடந்த மூன்று தலைமுறைகளாக நாங்கள் இந்தக் கலையை நிகழ்த்திவருகிறோம். இவை எந்த விதத்திலும் அழிந்துபோகக் கூடாது என்பதற்காகவே நாங்கள் இதனைப் பாதுகாத்து வருகிறோம்.

பெண் வேடமிட்டு ஆண்களே நடித்தாலும் கூட இதில் நாங்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் மிக அதிகம். அதையெல்லாம் தாங்கிக் கொள்வதற்கு காரணம் இந்தக் கலையின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வம் மட்டுமே. அதுவே எங்களை நகர்த்திச் செல்கிறது" என மகிழ்வுடன் தெரிவித்தார்.

இந்தக் கலைக் குடும்பத்தில் பெண் வேடமிட்டு பல மேடைகளில் கைதட்டல்களையும், மக்களின் வாழ்த்துகளையும் பெற்ற கலைஞர் சென்றாயப் பெருமாள், தற்போது மனோன்மணியம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

folk-artists

ராஜா ராணி ஆட்டக் கலைஞர்கள் படும் பாடு குறித்து பேராசிரியர் சென்றாய பெருமாள் கூறியதாவது, "நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்கள் இப்போதும்கூட வறுமையில்தான் வாழ்கின்றன. அதற்காகவே எங்களது பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரிடம் பேசி மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் படிக்கவரும் நாட்டுப்புறக் கலைஞர்களின் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணம் இலவசம் என்பதை அறிவிக்க முயற்சி மேற்கொண்டேன். இந்தத் திட்டம் இந்தியாவிலேயே பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாகும்.

தமிழ்நாடு அரசு நாட்டுப்புறக் கலைகளைச் சார்ந்து வாழும் ராஜா ராணி ஆட்டக் கலைஞர்கள் உட்பட அவர்களின் வாழ்வியல் மேம்பட உரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். சொந்தமாய் இவர்களுக்கென்று வீடு கிடையாது. குறிப்பாக, பங்குனி மாதத்திலிருந்து வைகாசி மாதம் வரை நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதார மாதங்களாகும். ஆனால், தற்போது கரோனா முற்றிலுமாக இவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிவிட்டது. கலை பண்பாட்டுத் துறையில் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கமிட்டி உறுப்பினர்களாகக் கொண்டுவர வேண்டும்.

கரோனா காலகட்டத்தில் அவர்களுக்கான வாழ்வாதாரம் உறுதி செய்யப்படவில்லை. இதனையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை” எனக் கூறினார்.

கூத்து பார்க்க வரும் ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்ந்திருந்த ராஜா ராணி கலைஞர்களின் வாழ்க்கை தற்போது மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்ற எதார்த்த உண்மையை உணர்ந்து தமிழ்நாடு அரசு இதுபோன்ற கலைஞர்களின் வேண்டுகோளுக்கு உடனடியாகச் செவிமடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: 'புதிய கல்விக் கொள்கை கேஃப்டேரியா அணுகுமுறையாக உள்ளது' - டாக்டர் எம்.கே.ஸ்ரீதர்!

Last Updated : Aug 1, 2020, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.