ETV Bharat / state

Madurai Festival Death: மதுரை கள்ளழகர் திருவிழாவில் 5 பேர் உயிரிழப்பு! - Madurai festival death

மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 6, 2023, 9:43 AM IST

Updated : May 6, 2023, 10:54 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருதப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, நேற்று (மே 5) காலை வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்று பகுதிக்கு வந்து கலந்து கொண்டனர்.

இதற்காக காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தன. மேலும், கள்ளழகரை தரிசனம் செய்வதற்காக வைகை ஆற்றுக்குள் பல்வேறு பகுதிகளில் இறங்கிய பக்தர்கள் பலர் தண்ணீரில் குதித்த படியும் உற்சாகமாக சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள தடுப்பணையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து வைகை ஆற்றின் கல்பாலம் பகுதியில் 2 உடல்கள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர், தீயணைப்புத் துறையினர் உதவி உடன் இரு சடலங்களும் மீட்கப்பட்டன.

அதில், மதுரை விளாச்சேரி ஜோசப் நகரைச் சேர்ந்த 18 வயதுடைய பிரேம்குமார் என்ற இளைஞரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், மற்றொரு சடலம் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், 3 உடல்களும் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இன்று (மே 6) காலை மதிச்சியம் பகுதியில் சித்திரை திருவிழாவிற்கு வந்த மதுரை எம்.கே.புரத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (23) என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதே போன்று மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்து தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு வருகை தந்த சுடலைமுத்து என்ற ஆட்டோ ஓட்டுநர், கூட்ட நெரிசலில் வந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு, மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Kallalagar: வைகையில் இறங்கிய கள்ளழகர்.. மதுரையை அதிர வைத்த 'கோவிந்தா' முழக்கம்!

Last Updated : May 6, 2023, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.