மதுரை: மத்திய சிறையில் தமிழ்நாட்டிலியே முதன்முறையாக சிறை கைதிகளுக்கு "ஆடியோ, வீடியோவுடன் வடிவில் ஆன டிஜிட்டல் நூலகத்திட்டம் " அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சிறையில் 1,850 கைதிகள் உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்த " புத்தக படிப்பு" ஊக்குவிக்கப்படுகிறது.
இதற்காக சிறை நிர்வாகம் 12,500 புத்தகங்களை சேகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.9) முதல் 19 வரை நடக்கும் புத்தக திருவிழாவில், பொதுமக்களிடம் இருந்து புத்தகங்களை சேகரிக்க ஸ்டால் ஒன்றை சிறை நிர்வாகம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக மதுரை சிறையில் "டிஜிட்டல் நுாலக திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சிறையில் உள்ள 52 'டிவி'க்கள் மூலம் தினமும் காலை, மாலையில் ஒன்றரை மணி நேரம் பிரபலமான, விருது பெற்ற நுால்களை ஆடியோ, வீடியோவுடன் வடிவில் படிக்கும் இத்திட்டத்தை நேற்று டி.ஐ.ஜி., பழனி தொடங்கி வைத்தார். கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:கடலில் வீசப்பட்ட தங்க குவியல்.. நடுக்கடலில் சிக்கிய கடத்தல் கும்பல்..!