மதுரை: நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள படம் 'வலிமை'. இத்திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு, அஜித் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் புலம்பி வந்தனர்.
இந்நிலையில் 'வலிமை' படத்தின் மோஷன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று (ஜூலை 11) மாலை 6 மணியளவில் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்டேட் வெளியான சில நிமிடங்களிலேயே, மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் பேனர் அடித்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேலும் வலிமை படத்தின் போஸ்டரை பிடித்துக்கொண்டு, தங்களின் இருசக்கர வாகனத்தில் மதுரைத் தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். தற்போது இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: வலிமை: கண்ணில் லென்ஸ் மிரட்டும் அஜித்