மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள ராமாயணச் சாவடி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சாலையோரங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் அந்த வழியாகச் சென்ற பசுமாடு ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி உள்ளே விழுந்தது.
வாய்க்காலில் விழுந்த பசு மாடு வெளியேற முடியாமல் தவித்தைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி கான்கிரீட் கம்பிகளை வெட்டி எடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு பசு மாடை மீட்டனர். துரிதமாக செயல்பட்டு பசுமாட்டை மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: ’ரோப் கார் வந்தா எங்க வாழ்வாதாரம் பறிபோகும்’