மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகஅர்ஜூன். இவரும் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் நெருங்கிய நண்பர்கள்.
நாகஅர்ஜூன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்தமாக மினி ஆட்டோ ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார், அவரிடம் போதிய பணம் இல்லாததால் தன்னுடைய நண்பரான ஆரோக்கியதாஸிடம் இருந்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று மினி ஆட்டோ வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போதிய வருமானம் இல்லாமல் நாகஅர்ஜூன் வாங்கிய கடனை நண்பருக்கு திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸ், நாகஅர்ஜூன் வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த மினி ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகஅர்ஜூன் எஸ்.எஸ் காலனி காவல்துறையில் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அவருடைய நண்பர் ஆரோக்கியதாஸ் வாகனத்திற்கு தீ வைத்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தலைமறைவாக உள்ள ஆரோக்கியதாஸை தேடிவருகிறார்கள்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை அருகே பாதி எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுப்பு