மதுரை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகம் ஒன்றில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்துவவந்த தீயணைப்புத் துறையினர், பணியில் இருந்த அலுவலர்களை அலுவலகத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றினர். பின்னர் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. அலுவலகத்தில் சில கணிகள் மட்டும் சேதமடைந்தன.