சமூகத்தின் புகழ்பெற்ற நிலையில் உள்ள பல்வேறு தரப்பினரும் கரோனா குறித்த விழிப்புணர்வுப் பணிகளில், தங்களது காணொலிகளை வழங்கியுள்ள நிலையில், தமிழ்த் திரைப்படத்துறையைச் சார்ந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள் தயாரித்துள்ள இந்த காணொலி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கு #QuarantineFightChallenge என தலைப்பிட்டு #fatherandsonfightchallenge எனப் பெயரிட்டு வெளியீடு செய்துள்ளனர். இதில் (#cinesouthindian #stuntunion #staysafe #stayhome) ஸ்டன்ட் மாஸ்டர்களாக இருக்கின்ற தந்தை, மகன்கள் இணைந்து ஒவ்வொரு ஜோடியாய் சண்டையிடுகின்றனர். இதில் முத்துக்காளை, தினேஷ் மாஸ்டர், யோகா ராஜ்குமார், மகாநதி சங்கர் ஆகியோரும் பங்களித்துள்ளனர்.
நிறைவாக சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி பயன்படுத்துதல் என்பதைச் சொல்லி நிறைவு செய்கின்றனர். 2.16 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த காணொலி, மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெருங்கிச் சண்டையிடுகின்ற தொழில் என்பதால், அதில்கூட விழிப்புணர்வுடன் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கின்றனர்.
ஸ்டன்ட் மாஸ்டர்கள் ஒருங்கிணைந்து, கரோனா வைரஸ் தொற்று குறித்து வெளியிட்ட விழிப்புணர்வு காணொலி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்த் திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்கத்தினர், தங்களின் சமூக அக்கறையை தங்களது தொழில் சார்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: 'அறம்' படத்திற்கு பின் 'க பெ ரணசிங்கம்' முக்கியப் படமாக இருக்கும் - ஜிப்ரான்