மதுரையில் சமூக வலைதளங்களின் மூலம், மூன்றே நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படும் என போலியான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதனை நம்பி விண்ணப்பிக்கும் மக்களுக்கு போலியான எண்கள் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் வழங்கியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், புகாரை உறுதி செய்து, போலியாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வந்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தொட்டியப்பன், உதயகுமார், அருண்பாண்டி, மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.