மதுரை: மதுரை வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஓகா, மதுரை, திண்டுக்கல் மற்றும் கொங்கன் ரயில்வே வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரயில்கள்,
திருநெல்வேலி - பிலாஸ்பூர், மதுரை - பிகானீர் ரயில்கள் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை இயக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த ரயில்களின் சேவை அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வண்டி எண் 06070 திருநெல்வேலி - பிலாஸ்பூர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 30 ஆம் தேதி வரையும், வண்டி எண் 06069 பிலாஸ்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 1ஆம் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, வண்டி எண் 06733 ராமேஸ்வரம் - ஓகா சிறப்பு ரயில் சேவை ஜனவரி 28ஆம் தேதி வரையும், வண்டி எண் 06734 ஓகா - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 1ஆம் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வண்டி எண் 06053 மதுரை - பிகானீர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 27 வரையும், வண்டி எண் 06054 பிகானீர் - மதுரை சிறப்பு ரயில் சேவை ஜனவரி 30ஆம் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எண் 06072 திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரயில் சேவை, ஜனவரி 26ஆம் தேதி வரையும், வண்டி எண் 06071 தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை ஜனவரி 27ஆம் தேதி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டை விட்டு தப்ப மாட்டேன் - நீதிமன்றத்தில் ஆர்யன் கான் உறுதி