மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த இருவரும் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.
சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்,ரகு கணேஷ், உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது சி.பி.ஐ.வழக்குப் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,9 பேர் மீது குற்றப்பத்திரிகை கடந்த 2020 செப்டம்பரில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள்.இவர்கள் தரப்பில் சாட்சிகளை மிரட்ட அதிக வாய்ப்புள்ளது.எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
அப்போது இந்த வழக்கில் சிபிஐக்கு மேலும் 2 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு மேலும் 5மாத கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக்கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. எனவே வழக்கு தாமதமாகியது. சிபிஐ தரப்பில் தற்போது வரை 8 முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியதுள்ளது என்றனர்.
இந்த வழக்கில் முக்கியமாக 2 மருத்துவர்கள், ஒரு நீதித்துறை நடுவர்,இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரி ஒருவர்,இந்த வழக்கின் சிபிஐ விசாரணை அதிகாரி மற்றும் 3 தனி நபர்கள் என 8 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க பட வேண்டும் எனவே 2 முதல் 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாத்தன்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க:ஜூலை 5ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அடுத்தது என்ன..?