ETV Bharat / state

குழந்தைகளை தத்தெடுக்க சட்டப்பூர்வமாக அணுகுங்கள்- மருத்துவர் கேப்டன் அகஸ்டஸ் சாமுவேல் டாட்

கரோனா பெருந்தொற்றுக் காலமாக இருந்தாலும், பிற சாதாரணமான நாள்களிலும் கூட குழந்தைகளை தத்தெடுப்பதை சட்டப்பூர்வமாக மேற்கொள்வதே அக்குழந்தைக்கு நாம் செய்யும் நற்செயல் என்கிறார் மதுரை கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் மருத்துவ உயர் அலுவலர் கேப்டன் அகஸ்டஸ் சாமுவேல் டாட்.

author img

By

Published : Jun 17, 2021, 9:49 PM IST

Augustus Samuel Todd
அகஸ்டஸ் சாமுவேல் டாட்

கரோனா தொற்று காலத்தில் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் அதிகரித்து வரும் நேரத்தில், முறையற்ற தத்தெடுப்புகளும் நிகழத் தொடங்கி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் குழந்தைகள் தத்து கொடுப்பில் பல்லாண்டு காலம் அனுபவமுள்ள மதுரை கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின், மருத்துவ உயர் அலுவலர் கேப்டன் அகஸ்டஸ் சாமுவேல் டாட் நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு விளக்கங்களை கொடுத்துள்ளார்.

இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து, வெளிநாடுகளில் இந்திய ராணுவத்திற்காக மருத்துவ பணியை சிறப்புடன் மேற்கொண்டமைக்காக ஓ.பி.பவான் பதக்கத்தை பெற்று. தற்போது மதுரை கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் மருத்துவ உயர் அலுவலராக தனது சேவையை செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'உலகத்திலேயே மூன்று கொடுமையான வியாபாரங்கள் உண்டு. 1. போதைப் பொருள்கள் விற்பனை, 2 ஆயுத தளவாடங்கள் விற்பனை, 3. குழந்தைகள் மனிதர்கள் கடத்தல். போர்க் காலங்களிலும், கரோனா போன்ற பெருந்தொற்று பரவலின் போதும் இந்தக் குழந்தைகள் கடத்தல் என்பது கூடுதலாக உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் குழந்தைகள் பலவிதமான கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்

இதற்காகவே அக்குழந்தைகளை பாதுகாக்கின்ற வளையமும் கட்டமைப்புகளும் மிக அவசியமாக தேவைப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் நம் கண் முன்னே ஒரு குழந்தை ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது என்றால் உடனடியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு (Child Protection Unit) தெரியப்படுத்த படுவது அவசியம். இந்த அலகுகள் அனைத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ஊழியர்கள் எனப் பலர் இயங்குகின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக குழந்தைகள் நலக்குழு (Child Welfare Committee) ஒன்றும் இயங்குகிறது. அதேபோன்று சைல்ட் லைன் (Child Line) 1098 என்ற இலவச அழைப்பு வசதியோடு 24 மணி நேரமும் இயங்குகின்ற ஓர்அமைப்பும் உண்டு. அழைத்த மறு நொடியில் நமது உதவிக்காக அவர்கள் வர தயாராக இருக்கிறார்கள்.

இது தவிர கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் போன்று (சிசிஐ CCI - Child Care Institutions) குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் மதுரையில் மட்டுமே 60க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இயங்குகின்றன. மேற்கண்ட எந்த அமைப்புகளையும் நாம் தொடர்பு கொண்டால் அவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் குறித்து மிகத்தெளிவான பதில் அளிக்க எப்போதும் தயாராக உள்ளனர்.

குழந்தைகளை தத்தெடுக்கும் முறையும் அதன் பாதுகாப்பும்;

ஆதரவற்ற நிலையில் ஒரு குழந்தை உள்ளது என்றால், உறவினர்களால் பாதுகாக்கப்படுமா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு முடியவில்லை என்றால் தத்து கொடுக்கும் நிறுவனத்திற்கு அக்குழந்தையை அழைத்து வந்து ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து சட்டரீதியாக அந்தக் குழந்தை குறித்து ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.

வேறு எவரும் அக்குழந்தை குறித்து சொந்தம் கொண்டாடாத பட்சத்தில், அக்குழந்தை குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு, குறிப்பிட்ட குழந்தைக்கு யாரும் இல்லை ஆகையால் தத்து கொடுக்கலாம் என அவர்களால் சான்று அளிக்கப்படும்.

இந்தச் சான்றுகளின் அடிப்படையில் தேசிய அளவில் இயங்கும் குழந்தைகள் தத்தெடுத்து வளர்க்க ஆதார ஆணையத்தில் (காரா - CARA - Child Adaption Resource Authorities) பதிவு செய்ய வேண்டும். குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களும், தத்துக் கொடுக்க தயாராக உள்ள குழந்தைகளின் விவரங்களும் அந்த தளத்தில் (http://cara.nic.in) இடம் பெற்று இருக்கும். பெரும்பாலும் கை கால் ஊனம் இல்லாத குழந்தைகளை இந்தியப் பெற்றோர்கள் தத்து எடுக்கின்றனர்.

அதேபோன்று அவ்வாறு ஊனம் உள்ள குழந்தைகளை தத்தெடுத்த கூடிய பெற்றோர்கள் இந்தியாவிலும் உண்டு வெளிநாடுகளிலும் உண்டு. இந்தியாவில் மருத்துவம் செய்ய இயலாத ஊனமுற்ற குழந்தைகளை வெளிநாடுகளுக்கு தத்து கொடுக்க காரா அனுமதி அளிக்கும்.

மேற்கண்ட குழந்தை தத்தெடுப்பு முறை என்பது குடும்ப நல நீதிமன்றங்கள் (Family Welfare Court) மூலமாகவே சட்டபூர்வமாக நடைபெறுகின்றன. குடும்ப நல நீதிமன்றங்களால் சான்றளிக்கப்பட்டதன் மூலமாகத்தான் ஒரு குழந்தை ஒரு பெற்றோருக்கு சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கப்படுகிறது. பிறகு குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ் உள்பட அனைத்தும் வழங்கப்படுகின்றன.

இதன்மூலம் அக்குழந்தை அனைத்து உரிமைகளையும் பெறுவதற்கு தகுதி படைத்ததாக மாறுகிறது. ஆகையால் ஒரு குழந்தை ஆதரவற்ற நிலையில் தள்ளப்படுகிறது என்று நினைப்பதை விட அதற்கு மிகச்சரியான பாதுகாப்பு உத்தரவாதம் நமது நாட்டில் உள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சிறப்பான மறுவாழ்வு கொடுத்து சமூகத்தில் பொறுப்பான குடிமகனாக குடிமகளாக அக்குழந்தையை உருவாக்குவதற்கு தேவையான அடிப்படை சட்டங்கள் நம்மிடம் உண்டு.

சமூக வலைதளங்களில் பந்தாடப்படும் குழந்தைகள்;

தற்போதைய கரோனா பெருந்தொற்று காலத்தைப் பொறுத்தவரை, தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வேதனைக்குரியது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆதரவற்ற குழந்தைகளை பெற்றுக் கொள்வது தொடர்பான தவறான தகவல்கள் பரவுகின்றன.

அதுபோன்று பொதுமக்களுக்கு தெரிந்த தகவல்களை உடனடியாக அந்தந்த மாவட்டத்தில் இயங்கும் குழந்தைகள் நல குழுவிற்கு தெரிவிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் பந்தாடப்படும் குழந்தைகள்
குழந்தைகள் குறித்த தகவல் பெற்றோருடன் குழந்தைகள் நலக்குழு உடனடியாக குழந்தையை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்குப்பிறகு சிசிஐ அமைப்புகள் மூலமாக அக்குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். 'ஒவ்வொரு குழந்தையும் ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டும்' என்ற அடிப்படையில் அக்குழந்தை சட்டபூர்வமான முறையில் தேவைப்படும் பெற்றோர்களுக்கு தத்து கொடுக்கப்படும்.
இதன் மூலம் அந்த குழந்தைக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்வதுடன் சமூகத்தின் பொறுப்புள்ள குடிமகனாகவும் மாற்றுவதற்கு நாம் உதவி செய்கிறோம் என்பதுதான் இதன் பொருள்' என்றார்.

இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்ற '1098' எண்ணைத் தொடர்பு கொள்ளவும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.