ETV Bharat / state

'ஒரு சிலர் பிஞ்சிலே பழுத்துள்ளனர்' - ஓபிஎஸ் மகனை கிண்டலடித்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!

மதுரை:"தேனி தொகுதிக்கு எனக்கு புதிய முகம், பழைய முகம் என்பது கிடையாது. ஆனால் ஒரு சிலர் பிஞ்சிலே பழுத்துள்ளனர். நான் மரத்திலே இருந்து இயற்கையாகக் கனிந்தவன்", என்று டிவிகேஎஸ் இளங்கோவன் ஓபிஎஸ் மகனை மறைமுக சாடியுள்ளார்.

EVKS ILANGOVAN
author img

By

Published : Mar 25, 2019, 7:45 PM IST

தேனி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ்யிடம் தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதுரை-போடி ரயில் பாதை திட்டத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டது. இந்த பணியை எடுத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம், உள்ளூர் அமைச்சர் 30 சதவீதம் லஞ்சம் கேட்டதால், பணிகள் கிடப்பில் உள்ளன. தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இத்திட்டத்தை ஆறு மாதத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுப்பேன்.

கடந்த சில வருடங்களாக மக்களை சுரண்டுவதையே தொழிலாக கொண்டவர்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளனர். அவர்கள் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. இளங்கோவன் நல்லது செய்வான் என்று என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.

நடிகனாக பார்த்தால் தேனி மாவட்டத்திற்கு நான் புதியவனாகத்தான் தெரிவேன். அரசியல்வாதியாக பார்த்தால் நூறாண்டு காலம் இந்த தமிழ்ச் சமுகத்திற்காக உழைத்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் நான். வெளிப்படையாகச் சொன்னால் சமூக நீதிக்காக போராடிய பெரியாரின் பேரன் நான். எனக்கு புதிய முகம், பழைய முகம் என்பது கிடையாது. ஆனால் ஒரு சிலர் பிஞ்சிலே பழுத்துள்ளனர். நான் மரத்திலே இருந்து இயற்கையாகக் கனிந்தவன்.

மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து என்னால் என்ன செய்ய முடியுமோ அதை தான் நான் வாக்குறுதியாக அளிப்பேன். தேனி மாவட்டத்தை சுற்றுலாத் தலமாக்க பாடுபடுவேன். ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.5000 என்று பணம் தருகின்ற வியூகம் எல்லாம் எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் இங்கு இருக்கின்ற மக்கள் எனக்கு நன்கொடை தந்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒன்றும் இல்லாதவன் அல்ல. அதேசமயம் லஞ்சத்தால் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னிடம் இல்லை. நான் மக்களை நம்பிதான் வந்திருக்கிறேன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

மோடியை இந்த நாட்டின் காவலாளி என பாஜகவினர் பரப்புரை செய்து வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சில இடங்களில் கூர்க்காவே திருடுவது உண்டு. அது போலத்தான் மோடி தன்னை காவலாளி என்று சொல்லிக்கொண்டு இந்திய மக்களை களவாடிக் கொண்டு இருக்கிறார்,என்றார்.

Intro: மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்களிடம் 30%லஞ்சத்தை கமிசனாக தேனி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் கேட்பதால் தான் பணிகள் தாமதமாகின்றன,
துணை முதல்வர் ஓபிஎஸ் மீது தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைமுக குற்றச்சாட்டு.

Body: தேனி பாராளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று தேர்தலுக்கான வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவிடம் மனுத்தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறுகையில், தேனி மாவட்டத்திற்கு இருந்த ஓரே ரயில் சேவையான மதுரை-போடி ரயில் பாதை திட்டத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் தேனி மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சர் கமிஷன் கேட்பதால்தான் அப்பணிகள் நிறைவேறாமல் இருக்கின்றன. எனக்கு தெரிந்த ஆந்திராவை சேர்ந்த ஒப்பந்ததாரர் கூறுகையில்,ரயில்வே பணிகளை மேற்கொள்வதற்கு தேனி மாவட்டத்திலுள்ள அமைச்சர் ஒருவர் 30% லஞ்சம் கேட்கிறார் அதை தர மறுப்பதால் தான் பணிகள் கைவிடப்பட்டன என ஓபிஎஸ் மீது மறைமுகமாக குற்றஞ்சாட்டினார். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்ற ஆறு மாதத்தில் மதுரை - போடி ரயில் பாதை திட்டத்தை கொண்டு வருவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த தேர்தலில் யாரை போட்டியாளராக கருதுகிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், என்னைப் பொறுத்தவரை நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை என்றார். மக்கள் சக்தியாக இருக்கின்ற திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன், ஒரு பக்கம் மக்கள் விரோத கூட்டணியாக போட்டியிடுகின்றனர் ஆனால் தேனி பாராளுமன்றத்திற்கு பட்ட மக்கள் தொகுதிக்கு நல்லது செய்வதில் அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக மக்களை சுரண்டுவதையே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் தான் இப்பகுதியில் உள்ளனர். மக்களுக்கு எந்த நல்லதையும் அவர்கள் செய்யவில்லை. இளங்கோவன் நல்லது செய்வான் என என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், கண்டிப்பாக இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேன் என்றார்.
இலங்கை பிரச்சனையில் எல்லா கட்சிகளும் சத்தம் போடுகின்றன.ஆனால் மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்தது. இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் பகுதிக்கு கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைப்பதற்கு காங்கிரஸ் அரசு உதவியது. மேலும் போரில் பாதிப்படைந்த ஒரு லட்சம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள் என மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது. ஆனால் அதை எல்லாம் மறைத்து காங்கிரஸ் மீது சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர் உண்மை அந்த மக்களுக்கு நன்றாக தெரியும் என தெரிவித்தார்.
நடிகனாக பார்த்தால் தேனி மாவட்டத்திற்கு நான் புதியவனாகத்தான் தெரிவேன். அரசியல்வாதியாக பார்த்தால் நூறாண்டு காலம் இந்த தமிழ்ச் சமூகத்திற்காக உழைத்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் நான், வெளிப்படையாகச் சொன்னால் சமூக நீதிக்காக போராடிய பெரியாரின் பேரன் நான். எனக்கு புதிய முகம், பழைய முகம் என்பது கிடையாது, ஆனால் ஒரு சிலர் பிஞ்சிலே பழுத்துள்ளனர். நான் மரத்திலே இருந்து இயற்கையாகக் கனிந்தவன் என்றார்.
மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து என்னால் என்ன செய்ய முடியுமோ அதை தான் நான் வாக்குறுதியாக அளிப்பேன். தேனி மாவட்டத்தை சுற்றுலாத் தலமாக்க பாடுபடுவேன் என்றார். மேலும் 500, 1000 மற்றும் 5000 என ஓட்டுக்கு பணம் தருகின்ற வியூகம் எல்லாம் எனக்குத் தெரியாது , இன்னும் சொல்லப்போனால் இங்கு இருக்கின்ற மக்கள் எனக்கு நன்கொடை தந்து கொண்டிருக்கிறார்கள், என்னைப் பொறுத்தவரை நான் ஒன்றும் இல்லாதவன் அல்ல, அதேசமயம் லஞ்சத்தால் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னிடம் இல்லை, நான் மக்களை நம்பி தான் இங்கு வந்திருக்கிறேன் எனக்கூறினார்.
மோடியை இந்த நாட்டின் காவலாளி என பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சில இடங்களில் கூர்க்காவே திருடுவது உண்டு. அது போலத்தான் மோடி தன்னை காவலாளி என்று சொல்லிக்கொண்டு இந்திய மக்களை களவாடிக் கொண்டு இருக்கிறார் என பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டினார்.
தங்கதமிழ்செல்வனை எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் கிடையாது,ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும் போது அவரது நடை, உடை, பாவனைகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என தெரிவித்தார்.

Conclusion:பேட்டி : ஈவிகேஎஸ். இளங்கோவன் - காங்கிரஸ் வேட்பாளர், தேனி தொகுதி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.