ETV Bharat / state

அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே தமிழ்நாடு அரசின் இலக்கு - நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் - நிதியமைச்சர்

'திராவிட இயக்கத்தின் முதன்மையான நோக்கம், யாரும் பின் தங்கி விடக்கூடாது; எல்லோருக்கும் சமவாய்ப்புத் தர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது' என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதே தமிழ்நாடு அரசின் இலக்கு - நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : Jun 24, 2022, 7:42 PM IST

மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ’அம்மன் சேவைப்பிரிவு’ உணவகத்தை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் காலோன், அரசு மருத்துவமனை முதலமைச்சர் ரத்தினவேல், உணவக உரிமையாளரும் திரைப்பட நடிகருமான சூரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'தற்போதைய தமிழ்நாடு அரசின் சிறந்த அடையாளங்களாக கருதப்படுவது மனிதநேயம் ஆகும். யாரையும் பின் தங்க விடக்கூடாது. எல்லோருக்கும் சமவாய்ப்புத்தர வேண்டும். துயரத்தில் இருப்பவர்களை கண்டுபிடித்து உதவி செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் மனிதநேயம் முதலாவதாக உள்ளது.

இரண்டாவது செயல்திறன். வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை இத்தனை சீக்கிரத்தில் நிறைவேற்றி தந்துள்ளதோடு மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதி கொடுத்து இருப்பதும் செயல் திறனுக்கு சான்றாகும்.

இது சாதாரண உணவகமாக தெரியலாம். ஆனால் இதன் பின்னால் மாபெரும் வெற்றி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் இன்னொரு நபர் இதனை நடத்தி வந்தார். ஜனவரி மாதம் அதன் டெண்டர் முடிந்தபோது இந்த உணவகம் மூலம் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த மாத வருமானம் ரூ.7 ஆயிரம் ஆகும். புதிதாக டெண்டர் விடப்பட்டு தற்போது இந்த மருத்துவமனைக்கு கிடைக்க உள்ள மாத வருமானம் 1 லட்சம் ரூபாய் ஆகும். தரமான உணவுப்பொருட்களை குறைவான விலைக்கு கொடுப்பதை இலக்காக கொண்டு இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே துயரத்தில், உடல் ரீதியான பிரச்னைகளோடு இங்கு வருபவர்களுக்கு குறைவான விலையில் தரமான உணவை தர வேண்டும் என யோசித்து வெளிப்படைத் தன்மையுடன் டெண்டர் விடப்பட்டு சிறப்பான நபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த காலங்களில் என்னென்ன தவறுகள் நடைபெற்று இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே தமிழ்நாடு அரசின் இலக்கு - நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

சில தவறான நபர்கள் ஒப்பந்தத்தை போட்ட பிறகு நீதிமன்றம் சென்று வழக்குப்போட்டு அதனை இழுத்தடிக்க நினைப்பார்கள். இந்த நல்ல விஷயத்தையும் அதன் மூலம் தடுக்க நினைத்தார்கள். ஆனால் நல்ல நீதிபதி, வழக்கறிஞர்கள், நேர்மையான அலுவலர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நல்வாழ்வுத்துறைச் செயலாளர், அரசு மருத்துவமனை முதல்வர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இதனை சிறப்பாக செய்துள்ளோம்’ என்றார்.

இதையும் படிங்க: எல்டிடிஇ அமைப்பை சேர்ந்த இருவருக்கு சிறை தண்டனையை குறைத்து விடுதலை செய்த உயர் நீதிமன்றம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.