ETV Bharat / state

ஆவணங்கள் எடுத்துச் சென்ற விவகாரம்: மதுரையில் வேட்பாளர்கள் தொடர் தர்ணா

மதுரை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்திலிருந்து தேர்தல் சம்பந்தமான ஆவணங்களை உரிய அனுமதியின்றி மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்ற சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தக்கோரி வேட்பாளர்கள் நேற்று இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

: மதுரையில் வேட்பாளர்கள் தொடர் தர்ணா
author img

By

Published : Apr 21, 2019, 8:11 AM IST

Updated : Apr 21, 2019, 9:49 AM IST

மதுரை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்த நிலையில், வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த மர்ம பெண் ஒருவர் தான் ஒரு அரசு அலுவலர் எனக் கூறிக்கொண்டு, வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று, அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச்சென்று அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையில் நகல் எடுத்துள்ளார்.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவர அந்தப் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளிக்கவே அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மதுரையில் வேட்பாளர்கள் தொடர் தர்ணா

இந்நிலையில், மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த அந்த பகுதியில், அதிகாரிகள் அனுமதியின்றி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி, அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குப்பதிவு பாதுகாப்பு மையத்தின் முன்பாக நேற்று இரவு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் பேசுகையில், " வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராங் ரூம் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், ஸ்டோரேஜ் அறைகளில் சீல் வைக்கப்படவில்லை. ஆவணங்களை எடுத்துச் சென்ற நபர் அரசு அலுவலர் என்று தெரிகிறது. ஆனால், இதுபோன்று முறையான அனுமதியின்றி அரசு அலுவலர்கள் உள்ளே வந்துசெல்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
20.04.2019

மதுரை நாடாளுமன்ற வாக்குபதிவு  எண்ணிக்கை மையத்தில் இருந்து ஆவணங்களை மர்மநபர் எடுத்துசென்றது தொடர்பாகவும், பாதுகாப்பை அதிகரிக்க மாவட்ட தேர்தல் அலுவலகத்தில்  புகார் -  பரபரப்பு - மையத்தின் முன்பாக வேட்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் தர்ணா.

அதிகாரதுஷ்பிரயோகத்தால் பாதுகாப்பற்ற நிலவுவதால் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும் என அமமுக வேட்பாளர் டேவிட்அண்ணாத்துரை, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி.

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்குபதிவு செய்யப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்ட மதுரை அரசு மருத்துவகல்லூரி வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுகாலை மர்ம நபர் ஒருவர் பெண் அதிகாரி என கூறி வாக்குஇயந்திரஙக்கள் அனுப்பிவைக்கப்பட்ட அறைக்கு அருகே  2மணி நேரமாக உள்ளிருந்து அங்குள்ள ஆவணங்களை அந்த நபர் எடுத்துசென்று அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று  நகல் எடுத்துள்ளார்.  இந்த நிலையில் அந்த மர்ம நபர் வந்தது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பார்த்தபின்னர் அது குறித்து கேட்டபோது   முன்னுக்குபின் பதிலளித்த நிலையில் காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்து அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இந்நிலையில் மூன்றடுக்கு  பாதுகாப்பு இருந்த நிலையில் உயர்அதிகாரிகள் அனுமதி இன்றி ஆவணங்கள் எடுத்துசெல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கைவிடுத்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் வந்து விசாரணை நடத்தி உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என கூறி , அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி்வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குபதிவு பாதுகாப்பு மையத்தின் முன்பாக தொடர் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டதால் 3மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து  மர்ம நபர் வந்துசென்றது குறித்த சிசிடிவி காட்சிகளை வேட்பாளர்கள் முன்பு பார்வையிட செய்தபின்னர் வேட்பாளர்கள் வெளியே வந்தபின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் அளித்தனர்.

*பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன்*

வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறை பாதுகாப்பாக உள்ளதாகவும், எதிரில் உள்ள அறையில் பெண் அதிகாரி ஆவணங்கள் குறித்து பார்வையிட்டதாகவும், அவருடன் 3அதிகாரிகளும் உடன் இருந்தனர். நாங்கள் சிசிடிவி கேமிரா பதிவுகளை பார்வையிட்டோம். தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்துவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார்.

*இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை :*

வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை  பாதுகாப்பாக உள்ளது, உள்ளே சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் , யாருடைய தூண்டுதலில் சென்றார்கள் என்பதை விசாரிக்க வேண்டும் என்றார்.

*மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் பேசுகையில் :*

வாக்குஎண்ணிக்கை மைய அறைக்குள் அதிகாரிகள் சென்றது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வோம், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதுகாப்பை உறுதிபடுத்துவோம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.

Visual send in mojo kit and ftp
Visual name :
1.TN_MDU_02a_20_ELECTION ISSUE_TN10003
2.TN_MDU_02b_20_ELECTION ISSUE_TN10003
3.TN_MDU_02c_20_ELECTION ISSUE_TN10003

Last Updated : Apr 21, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.