ETV Bharat / state

கம்பி நிறுவன மேலாளர் விஷமருந்தி தற்கொலை! - madurai news

மதுரை: புறவழி சாலை பாலத்தின் கீழே கம்பி நிறுவன மேலாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்

முதியவர் அருந்திய விஷம்
முதியவர் அருந்திய விஷம்
author img

By

Published : Mar 10, 2020, 7:52 PM IST

மதுரை புறவழிச்சாலை விஓசி பாலத்திற்கு கீழே முதியவர் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி, கீழே கிடந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் எஸ்.எஸ் காலனி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், முதியவரை நெருங்கி சென்று பார்த்தனர். அவர் அருகில் இரண்டு பால்டாய்ல் புட்டிகள் கிடந்தன.

முதியவர் விஷமருந்தி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் உடல் உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மதுரை புறவழி சாலையில் உள்ள தனியார் கம்பி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் ரவிச்சந்திரன்(58) என தெரியவந்தது.

இவர் மதுரை, காக்கா தோப்பு தெருவில் வசித்துவருகிறார். இவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என மதுரை எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்: நீதிமன்றம் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.