மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதிகளில் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பாதிகப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த 110 பேரை தனிமைப்படுத்தி அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து திருமங்கலம் நகர் பகுதிகளை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரோஜா தோட்டம், சோமசுந்தரம் தெரு, சோழவந்தான் சாலை, முன்சீப் கோர்ட் ரோடு, மதுரை சாலை உள்ளிட்ட திருமங்கலம் நகர் பகுதிகளை காவல் துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க தொடங்கியுள்ளனர். அப்பணியை மதுரை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ட்ரோனுடன் ஓர் கண்ணாம்பூச்சி: திருப்பூர் பாய்ஸை ஓவர்டேக் செய்த சேலம் பாய்ஸ்