விருதுநகரில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் பங்கேற்க மதுரை விமான நிலையம் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்குத் தடையேதுமில்லை. அந்த வழக்கு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல தடையில்லாததால், பெண்களை அனுமதிக்க வேண்டும். இதனை மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பாகும்.
தொடர்ந்து, சென்னை ஐஐடியில் பெரிய அளவிற்கு இதுவரை பலர் தற்கொலை செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எவ்வித உற்சாகமுமின்றி வெளியேறக்கூடிய சூழலை ஐஐடி உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
ஐஐடி போன்ற இடங்களில் உயர் சமுதாய பேராசியர்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் அதிமாக இருப்பது, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் முன்னேறிவிடக் கூடாது, இடஒதுக்கீட்டின் மீது உள்ள வெறுப்பு, ஜாதி மத உணர்வு உள்ளிட்ட அடிப்படையே தற்கொலை போன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளன.
மாணவி பாத்திமா லத்தீப் உயிரிழந்தது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில், பெரியார் மண்ணில் இவ்வாறு நடத்திருப்பது வேதனைக்குரியது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'சபரிமலையில் பீடி, சிகரெட் குடித்த பெண்களை அனுமதித்தவர் பினராயி விஜயன்' - அர்ஜூன் சம்பத் சர்ச்சைப் பேச்சு