ETV Bharat / state

மதுரை மருத்துவருக்கு சிறப்பு விருது வழங்கிய இங்கிலாந்து பாராளுமன்றம்! - Special award for Madurai doctor

மதுரை: மருத்துவ சேவையில் சிறந்து பணியாற்றிய மருத்துவர் அமுதகுமாருக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் "வாழ்நாள் மருத்துவ சாதனையாளர்" விருதும், லண்டன் உலக தமிழ்ச் சங்கம் சார்பில் "உலக மருத்துவ சாதனையாளர்" விருதும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு சிறப்பு விருது வழங்கி இங்கிலாந்து பாராளுமன்றம்
மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு சிறப்பு விருது வழங்கி இங்கிலாந்து பாராளுமன்றம்
author img

By

Published : Nov 26, 2019, 7:30 PM IST

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் அமுதகுமார் மருத்துவச் சேவையில் சிறந்து பணியாற்றியமைக்காக இங்கிலாந்து பாராளுமன்றம் "வாழ்நாள் மருத்துவ சாதனையாளர்" விருதும், லண்டன் உலக தமிழ்ச் சங்கம் சார்பில் "உலக மருத்துவ சாதனையாளர்" விருதும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

இங்கிலாந்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த மருத்துவர் அமுதகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘மருத்துவ சேவைக்கான உயரிய விருது கடந்த 22ஆம் தேதி இங்கிலாந்து பாராளுமன்றம் "வாழ்நாள் மருத்துவ சாதனையாளர்" விருது வழங்கியது. அதேபோல் லண்டன் உலக தமிழ்ச் சங்கம் சார்பில் "உலக மருத்துவ சாதனையாளர்" விருதும் வழங்கப்பெற்றேன்’ என்றார்.

தொடர்ந்து, 'விருது கிடைத்தமைக்கு மிகவும் பெருமை அடைகிறேன். கிராமப்புற சேவை, அவசரகால சேவை ஆகிய பிரிவுகளில் சிறந்த மருத்துவ சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது' எனக் கூறினார்.

மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு சிறப்பு விருது வழங்கிய இங்கிலாந்து பாராளுமன்றம்

மேலும், 'தமிழகத்திலிருந்து இந்த விருது முதன் முறையாக எனக்கு கிடைத்துள்ளது. கடந்த 22 வருடங்களாக மருத்துவ சேவை செய்ததில் விருது கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன்' எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நாமக்கல் அருகே போலி மருத்துவர் கைது!

Intro:*மருத்துவ சேவையில் சிறந்து பணியாற்றியமைக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மதுரை டாக்டருக்கு சிறப்பு விருது வழங்கி பாராட்டு*Body:
*மருத்துவ சேவையில் சிறந்து பணியாற்றியமைக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மதுரை டாக்டருக்கு சிறப்பு விருது வழங்கி பாராட்டு*

மதுரை விமான நிலையத்தில் சிறந்த மருத்துவ சேவைக்கான லண்டனில் உலக மருத்துவ சேவைக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் "உலக மருத்துவர்களுக்கான "குளோபல் எக்ஸலன்ட்ஸ்" விருதும், மருத்துவ துறையில் சிறந்த சேவைக்கு "வாழ்நாள் சாதனையாளர் " விருதும், லண்டன் தழிழ் சங்கம் வழங்கி கெளரவ படுத்தி வருகிறது. இந்த விருதினை தமிழகத்திலிருந்து சிறந்த மருத்துவ சேவைக்காக முதல் தமிழர் மதுரை Dr. அமுதகுமாருக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மருத்துவ சேவைக்கான விருது கிடைத்துள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த Dr. அமுதகுமார். இவர் கடந்த 1991 முதல் மருத்துவ சேவை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி இங்கிலாந்து பாராளுமன்றம் மற்றும் லண்டன் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

*மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் அமுதகுமார் பேசும்போது;*

இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் மருத்துவ சேவைக்கான உயரிய விருது கடந்த 22ஆம் தேதி இங்கிலாந்து பாராளுமன்றம் "வாழ்நாள் மருத்துவ சாதனையாளர் " விருது வழங்கியது. இதே போல் லண்டன் உலக தமிழ் சங்கம் சார்பில் "உலக மருத்துவ சாதனையாளர் " விருது வழங்கப்பெற்றேன்.

விருது கிடைத்தமைக்கு மிகவும் பெருமை அடைகிறேன். கிராமப்புற சேவை, அவசரகால சேவை ஆகிய பிரிவுகளில் சிறந்த மருத்துவ சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து இந்த விருது முதன் முறையாக எனக்கு கிடைத்துள்ளது.

கடந்த 22 வருடங்களாக சேவை செய்தது மருத்துவ சேவை செய்ததில் விருது கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

*பேட்டி;*
*Dr. அமுத குமார்*
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.