ETV Bharat / state

பெண் மருத்துவர் மீது தாக்குதல்; போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி

author img

By

Published : Dec 14, 2019, 7:27 PM IST

மதுரை: அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

doctor
doctor

மதுரை அரசு மருத்துவமனையில் இன்று காலை மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த, பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவ வார்டு பகுதியில் அவரது உறவினர்கள் செருப்பு அணிந்தபடி அனுமதியின்றி நுழைந்துள்ளனர்.

இதற்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் பயிற்சி மருத்துவர் ஆட்சேபம் தெரிவிக்க, நோயாளியின் உறவினர்கள் அவரை அவதூறாக பேசி மருத்துவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதனால் பெண் மருத்துவர் காயமடைந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

இதனையடுத்து, காவல் துறையினருக்கு அளித்த புகாரையடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், சம்பவத்தின் போது அலட்சியமாக இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தையின் சிறுநீரகத்தை மகனுக்கு பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை!

Intro:*மதுரை அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம் - அரசு மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவர்கள் வேண்டுகோள்*Body:*மதுரை அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம் - அரசு மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க மருத்துவர்கள் வேண்டுகோள்*

மதுரை அரசு மருத்துவமனையில் இன்று காலை மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரசவ வார்டு பகுதியில் செருப்பு அணிந்தபடி அனுமதியின்றி உள்ளே நுழைந்துள்ளனர்.

இது குறித்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுத்த போது நோயாளியின் உறவினர்கள் அவதூறாக பேசியும் மருத்துவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய நிலையில் பெண் மருத்துவர் காயமடைந்தார்.

இதனையடுத்து காவல்துறையினிருக்கு அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும், சம்பவத்தின் போது அலட்சியமாக இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவசர சிகிச்சை மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு என்று கூறி தற்காலிக பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மதியம் 12.30மணிக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

பைட்-1 திரு.ரமேஷ் - அரசு மருத்துவர்கள் சங்க செயலாளர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.