மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. மேயர், ஆணையாளர் வருகை தராதநிலையில் இருக்கை ஒதுக்கீடு குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கான மாமன்றக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தங்களுக்கான இருக்கை தொடர்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயரை சந்தித்து முறையிடுவதற்காக மேயர் அறைக்குச் சென்றனர்.
அப்போது அதனை செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை மேயர் அறை முன்பாக இருந்த திமுகவைச் சேர்ந்த சிலர் திடீரென தாக்கினர். தொடர்ந்து செய்தியாளர்களின் கேமராக்களை காலால் எட்டி உதைத்தனர். இதனையடுத்து திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து செய்தியாளர்கள் மேயர் அறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி மேயர் அறை தொடர்பே இல்லாத சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மேலும் திமுக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர், உறவினர்கள் முழுவதுமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகவும் அனைத்துகட்சி மாமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக வேண்டும் என்பதே எனது லட்சியம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்