ETV Bharat / state

திமுகவை பிரசாந்த் கிஷோர் இயக்குகிறார் - மு.க. அழகிரி - மதுரை செய்திகள்

மதுரை : வட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் வழிநடத்துவது ஒருபோதும் திமுகவுக்கு சாதகமாக அமையாது என அக்கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.

M.K. Alagiri Speech
மு.க.அழகிரி பேச்சு
author img

By

Published : Jan 6, 2021, 6:41 AM IST

திமுகவிற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தி.மு.க.,வின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரிக்கும், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே அரசியல் பனிப்போர் மூண்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதில் தனது பங்களிப்பு இருக்கும் எனத் தெரிவித்த மு.க.அழகிரி கடந்த 3ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட அந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாக மு.க.அழகிரி விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று (ஜன.5) அளித்திருந்த பேட்டியில், “ எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் தான். எத்தனையோ பேரை அமைச்சர்கள் ஆக்கினேன். அவர்களில் பலர் நன்றியில்லாமல் போய்விட்டனர்.

மு.க.அழகிரி தொண்டர்கள் மத்தியில் பேச்சு

பாதிக்கப்பட்ட திமுக தொண்டனுக்காக நான் நீதி கேட்டேன். அதற்காக திட்டமிட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் நீக்கப்பட்டு ஏழாண்டுகள் ஆகிவிட்டன. கலைஞருக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலயே என்னை திமுகவில் இருந்து சில துரோக சக்திகள் நீக்கினர்.

இன்றும் என் வார்த்தைக்காக திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் காத்திருக்கின்றனர்.

நான் எந்த முடிவை எடுத்தாலும், அதனை ஏற்றுக்கொள்வதாக எனது தொண்டர்களும், விசுவாசிகளும் உறுதியளித்துள்ளனர். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் எனது பங்கு இருக்கும்.

பாதிக்கப்பட்ட திமுக தொண்டனுக்காக நான் நீதி கேட்டேன். அதற்காக திட்டமிட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் நீக்கப்பட்டு ஏழாண்டுகள் ஆகிவிட்டன.

திமுகவின் வளர்ச்சிக்காக நான் அளித்த உழைப்பையெல்லாம் வீணாக்கிவிட்டார்கள். இன்று பிரசாந்த் கிஷோர் என்ற வடநாட்டுக்காரரை வைத்து திமுகவை இயக்குகின்றனர். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. அவரது ஆலோசனைகள் திமுகவுக்கு சாதகமாக அமையாது என்றே நினைக்கிறேன்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களை நம்பியே கட்சியை நடத்தினார். தற்போது அவரை மறந்துவிட்டு தற்போதைய திமுக நடக்கிறது. மு.க. ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. எனது ஆதரவாளர்கள் விடமாட்டார்கள். பாஜக என்னை இயக்குவதாகக் கூறுவது மிகவும் தவறு. அது வெறும் வதந்தி” எனக் கூறினார்.

இதையும் படிங்க : கடைத்தெருவின் கலைஞன் ஆ. மாதவனுக்கு என் அஞ்சலி - கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.