மதுரையில் உள்ள திரையரங்குகளில் அதிமுகவின் விளம்பரங்கள் திரையிடப்படுவதாக மத்திய தொகுதி தேர்தல் அலுவலரிடம் திமுக நெசவாளர் அணியின் அமைப்பாளர் வெள்ளைத்துரை புகார் மனு அளித்தார்.
அதில் காளவாசல் பகுதியில் உள்ள திரையரங்கம் உள்ளிட்டவற்றில் அதிமுகவின் 'வெற்றி நடைபோடும் தமிழகமே' என்ற விளம்பரம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாயிலாகத் திரையிடப்படுகிறது.
இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். எனவே திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட அனுமதி அளித்த செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடிமராமத்துப் பணிகளில் ரூ.3 கோடி முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக புகார்!