மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் 2012ஆம் ஆண்டு சட்டத்துக்கு புறம்பாக நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சுமார் 1,500 கிலோ அரிசி, 90லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றுள்ளார். அப்போது குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் நேற்று மாவட்ட மூன்றாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆறு மாத சிறையும், நூறு ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.