ETV Bharat / state

தேவர் ஜெயந்தி விழா; மதுரையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Thevar Jayanthi: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தேவர் ஜெயந்தி விழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 7:48 AM IST

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், அனைத்துத் தரப்பினரும் மரியாதை செலுத்த தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்துள்ளது. நாளை 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவினை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலை அருகே மக்களுக்கான தண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார்.

இதையும் படிங்க: ஊராட்சிமன்ற தலைவரின் இணையவழி கடவுச் சொல் மூலம் பணம் கையாடல்.. 6 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

அதனைத் தொடர்ந்து, சிலைக்கு மாலை அணிவிக்க வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்கள் வர இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழக முதல்வர் மற்றும் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் வருகையையொட்டி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலை உள்ளிட்ட மாநகர் பகுதியில் இன்றும் (அக்.29), நாளையும் (அக்.30) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மதுரை நகர், புறநகர் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சோதனைச் சாவடி, முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிகளை மீறும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பூரில் கேள்விக் குறியாகும் பின்னலாடை நிறுவனங்கள்..! வரலாறு காணாத வீழ்ச்சி சந்திக்கும் நிறுவனங்கள்.. திருப்பூர் பின்னலாடை தொழிலின் நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.