ETV Bharat / state

அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அகற்றப்பட்ட புகைப்படங்களை மீண்டும் வைக்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் வைக்க கேரிய வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Nov 11, 2021, 7:54 AM IST

மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த பாப்புலர் முத்தையா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி புகைப்படம் மற்றும் பல்வேறு தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

தற்போது 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் அம்மா உணவகங்களில் உள்ள படங்கள் அகற்றப்படாது எனத் தெரிவித்தார். ஆனால், தற்போது திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

எனவே அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை வைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் இது அரசின் கொள்கை ரீதியான முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நாளை கனமழை; எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் தயார் - அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.